பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பங்கள் எனக்கு ஒன்றேனும் வாய்க்கவில்லை. நான் கபாவத்தில் நாணயமும். கூச்சமும் உள்ள பையனாக இருந்ததோடு, பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாகவும். குழப்பமுடையவனாகவும் இருந்தேன். அக்காலத்தில் நான் ஒரு பூரண நாஸ்திகவாதியல்ல. என்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங்கொடுப்பார் ஆனால் நாஸ்திகத்திற்கோ கடுகளவும் இடங்கொடாத பரம விரோதி. எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, நான் லாகூர் டி. எ. வி (D. A. V.) கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் (Boarding House) ஒரு வருஷம் கழித்தேன். அங்கே நான், காலை மாலை பிரார்த்தனையோடு, காயத்திரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம். அக்காலத்தில் நான் ஓர் பரம பக்தனாகவே இருந்தேன். பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக்யத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தாராள நோக்குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையைத் தத்தஞ் செய்யவேண்டுமென்ற உணர்ச்சியும், உறுதியும் கொண்டேன். ஆனால், அவர் ஒரு நாஸ்திகரல்ல, அவர் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கையுடையவர். தினசரி பிரார்த்தனை செய்யும்படியாக அவர் எனக்கு உற்சாக மூட்டுவது வழக்கம்.

இவ்விதமாகவே நான் ஆரம்பத்தில் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் எல்லா மதங்களைப் பற்றியும்— கடவுளைப்பற்றியும் கூட—தாராளமாக எண்ணுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தர்க்கிப்பதற்கும், ஆரம்பித்தேன். அப்பொழுதும்கூட நான் பரம தெய்வ பக்தனாகவே இருந்தேன். அதுகால பரியந்தம். நான் எனது தலைமயிரைக் கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக் கட்டிக்காப்பாற்றி வந்தேனானாலும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாந்தங்களிலும்

நா—2