பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

இரகசிய வேலைகளில் தடுக்க முடியாதபடி நிகழ்கிறது. அந்தத் துண்டுப் பிரசுரத்தில் “சர்வேஸ்வரனையும்” அவனுடைய திருவிளையாடல்களையும் போற்றிப் புகழ்வதற்காக ஒரு முழுப்பத்தி தத்தஞ்செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருக்கும் விஷயமோ முற்றும் “பிரம்ம ரகசியம்” நான் எடுத்துக்காட்ட விரும்புவது என்னவென்றால், புரட்சிக் கட்சியில்கூட (அதுவரையில்) “கடவுள் உண்டு” என்பதில் அவநம்பிக்கை கொள்ளும் அபிப்பிராயம் முளைக்கவில்லை என்பதேயாகும். பெரும் புகழ்பெற்ற காக்கோரி தியாகிகள் நால்வரும் தங்களுடைய கட்சி வாழ்நாட்களை பிரார்த்தனையிலேதான் கழித்தார்கள். ராம பிரசாத் பிஸ்மில் என்பவர் ஒரு வைதீக ஆரிய சமாஜியாவார். ராஜன்ய லாகிரி என்பவர் சமதர்மத்தையும், பொதுவுடமையையும் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருந்தும் தனது கடைசிக் காலத்தில் கீதையிலிருந்தும், உபநிஷத்துக்களிலிருந்தும் சுலோகங்கள் ஜெபிக்கவேண்டுமென்று ஆர்வத்தை அவரால் அடக்க முடியவில்லை. அக்கூட்டத்தில் பிரார்த்தனையே செய்யாத ஒருவரை யான் கண்டேன். அவர் அடிக்கடி “மனிதனின் பலவீனத்தாலும் கட்டுப்பட்ட அறிவாலும் உதித்ததுதான் தத்துவ சாஸ்திரம்” என்று சொல்லுவார். அவரும் ஜென்ம தண்டனை விதிக்கப்பட்டு இப்பொழுது தீவாந்திர சிகைஷ அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் கூட ஒரு போதும் கடவுள் உண்டென்பதை மறுத்துக் கூறத்துணிந்தாரில்லை.

ஆராய முற்பட்டேன்

அன்றுவரை, நான் ஓர் வீர இலட்சியங் கொண்ட புரட்சிக்காரனாக மாத்திரமே இருந்தேன். அதுவரை நாங்கள் பின்பற்றுகின்றவர்களாக மாத்திரமே இருந்தோம். அவர்கள் எல்லாம் தண்டனை அடைந்த பிறகு கட்சியின் முழுப் பொறுப்பையும் சுமக்கவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. சிலகாலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பது கூட அசாத்தியமென்று தோன்றிற்று. உணர்ச்சியும் :