பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கடுமையாக வெறுக்கிறோம். அவனுடைய பெயரைக்கூட வெகுவாக நிந்திக்கிறோம்.

என்ன தீர்ப்பு சொல்கிறீர்கள் ?

அப்படியானால் கணக்கு வழக்கற்ற கொலைகளை, துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை—ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற “என்றுமுள” நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு—நீங்கள் என்ன தீர்ப்புக் கூறப்போகிறீர்கள் ? செங்கிஷ்கான் தோற்றோடும்படியாக ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அவனுடைய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க நினைக்கிறீர்கள்? அவன் இந்த உலகத்தை—மெய்யான (கண்கண்ட) நரகத்தை—சதா கவலையும், குழப்பமும், சஞ்சலமும் நிறைந்த கசப்புக்குரிய அமைதியற்ற ஸ்தலத்தை—எதற்காக படைத்தான்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் தன்னிடமிருக்கும்பொழுது, சர்வ சக்தனாகிய அக்கடவுள் மனிதனை, ஏன் இத்தகைய உலகில் சிருஷ்டித்தான்? இவற்றிற்கெல்லாம் என்ன நியாயம் சொல்லப்போகிறீர்கள்? உத்தமர்களான நிரபராதிகளான தியாக மூர்த்திகளை, உண்மையின் பொருட்டுக் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு இரையாகின்றவர்களை மறுமையில் சன்மானிப்பதற்காகவும், துஷ்டர்களை, கொடியவர்களை, மோச நாசக்காரர்களை மறுமையில் தண்டிப்பதற்காகவுமே கடவுள் சிருஷ்டித்தார் என்று கூறுகிறீர்களா? நன்று, நன்று! உங்களிடம் ஒன்று கேட்கிறேன். பின்னால் மிகமிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து, அரிய இனிய சிகிச்சையால் நோவைக் குறைத்து நோவை. சுகப்படுத்துவதற்காக, தற்பொழுது உடம்பில் படுகாயம் பண்ணுகிறேன் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா ? கிளாடியேட்டர் (Cladiatcr) ஸ்தாபனத்தை ஆதரிக்கிறவர்களும் நிர்வகிக்கிறவர்களும், அகோரப் பசியால் பயங்கரமான கோபாவேசத்துடன் கர்ஜிக்கும் சிங்கங்களின் முன்னால் மனிதர்களைத் தூக்கியெறிகிறார்கள். அவ்வாறு தூக்கியெறிவது, எறியப்படுகிறவர்கள் சிங்கங்களோடு

நா—3