பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

என்று சொல்லுவது தான் நமக்கு மிக மகி ஆச்சரியமாக இருக்கின்றது.

காந்தியாரும்—பார்ப்பனியாரும் ஒன்றே!

திரு. காந்தியவர்கள் என்றைய தினம் கடவுள் தான். தன்னை நடத்துகின்றார் என்றும், வர்ணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ, அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன், அத்தத்துவம்கொண்ட காங்கிரசு ஓழிந்தாலொழியா நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். ஆனால், அந்த உண்மையை இன்றாவது மக்களில் சிலராவது கண்டுபிடித்து, "காந்தீயம் அழிக" என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கிறார்கள் என்கின்ற விஷயம். நமக்கு மிகுதியும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுக்கத்தக்கதாய் இருக்கிறது. அன்றியும், இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியுமாகும்.

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. மேலும். பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கு இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சும்மா தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு, செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு–ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்கப் பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு எவரும் அடையமுடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!! இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உணமையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.