பக்கம்:நான் நாத்திகன் ஏன்?.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பெற்றிருந்தால்தான் நான் உண்மையான ஒரு மகானின் பெருமையை மறுக்கக்கூடும். ஆனால் கடவுள் நம்பிக்கையில் அழுந்தியிருக்கிற ஒருமனிதன், எவ்வாறு தன்னுடைய சொந்த அகங்காரத்தின் காரணமாக கடவுள் நம்பிக்கையைவிட முடியும்? இதற்கு இரண்டு வழிகள் தான். உண்டு. ஒன்று அவன் தன்னைக் கடவுளின் பரமவிரோதி என்று கருதத் தொடங்க வேண்டும் அல்லது அவன் தானே கடவுள் என்று நம்ப ஆரம்பிக்க வேண்டும். இவ்விரு விதத்தினாலும்கூட அவனை ஒரு சம்பூர்ணமான நாத்திகனென்று கொள்ள முடியாது. முதலாவது விசயத்தில் அவன் தனக்கு எதிரி அதாவது கடவுளைத் தனக்கு எதிரியாக நினைக்கிறவன், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நினைத்துத்தான் எதிரியாக்குகிறான். ஆதலால், கடவுள் உண்டு என்பதை மறுக்கவில்லை.

அடியோடு மறுக்கிறேன்!

இரண்டாவது விஷயத்தில், தன்னறிவோடு கூடிய ஒரு சக்தி திரைமறைவிலிருந்து பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறதென்பதை அவன் ஒத்துக்கொள்கிறான். அவன் அந்த “ஈடும் எடுப்புமில்லாத” வஸ்துவேதான் என்று கருதிக்கொண்டாலும் சரி, அல்லது அந்த மேலான வஸ்துவைத் தன்னையன்றிப் பிறிதொன்றாக அவன் கருதிக் கொண்டாலும் சரி, நாம் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை, அது நமக்கு முக்கியமான விஷயமுமல்ல. நான் குறிப்பிடுவதெல்லாம் ‘கடவுள் உண்டு’ என்கிற நம்பிக்கை—ஆராய்ச்சி விசயத்தின் கடவுள் உணர்ச்சிக்கு அடிப்படையான தத்துவம் ஆகியவை அதில் அடங்கியிருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்டவனை எவ்விதத்திலும் நாத்திகனென்று கூற முடியாது.

நன்று ! இங்கு எனது நிலைமையை விளக்குவது பொருந்தும். நான் மேலே கூறிய முதற் பிரிவையோ, இரண்டாவது பிரிவையோ சேர்ந்தவனல்ல. ‘சர்வலோக சரண்யனாகிய ஜகதீசன்’ ஒருவன்—அல்லது முழு முதற்கடவுள் ஒன்று—உண்டு என்பதையே நான் அடியோடு மறுக்கிறேன். நான் ஏன் மறுக்கிறேன் என்பதைப் பின்னால் விரிவுபடுத்துகிறேன். ஆனால் நான் நாத்திசு-