பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 - நாம் அறிந்த கி.வா.ஜ.

கைரேகை நிபுணருக்கு வியப்பாகி வி ட் டது ) “தாங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. விளக்க வேண்டும்’ என்று சாக்ரடீஸிடம் கேட்டுக்கொண்டார். “நான் முன்பு இக்குற்றங்கள் அனைத்தையும் செய்த துண்டு. பின்பு பையப்பைய ஒவ்வொன்றாக அக்குற்றங் களை ஒழித்துவிட்டேன்’ என்றாராம் சாக்ரடீஸ்.

குற்றம் மனிதனிடம் இருந்தாலும், ஒவ்வொன்றாக நீக்கிக்கொள்ள வேண்டும்,

ஒர் அரசர் தம்மிடமுள்ள பல குற்றங்களில் ஒரு குற்றத்தை மட்டும் ஒரு நாள்முதல் செய்யாதிருப்பதாக உறுதி கொண்டார். ஒரு வாரத்தில் அக்குற்றத்திலிருந்து நீங்கினார். அடுத்த வாரத்தில் இன்னொரு குற்றத்தை விலக்கினார். இப்படியே ஒவ்வொன்றாக விலக் கி , வழக்கப்பட்டுக் குற்றங்கள் அனைத்தையும் நீத்தார்.

நான் எப்போதும் பிறர் குணத்தையன்றிக் குற்றங் களை எடுத்துக் கூறுவதில்லை. குற்றம் மனித இயற்கை; பிறரைத் திருத்துவதைவிட நாம் திருந்துவது மேல். சுபாவமான கெட்ட குணங்களை நீக்கிக்கொள்ள முடியாது என்பதில்லை. நமது முயற்சியினால் நம்மை. நாமே திருத்திக்கொள்ளலாம் என்று தெரிகிறது’ என ஐயரவர்கள் சொன்னார்.

இவர் உடனே பங்களுர்ச் சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இனி ஒருபோதும் அதுபோல் நடந்து கொள்ளக் கூடாது’ என உறுதி பூண்டார்.

இவருடைய தந்தையாருக்கு முன்கோபம் அதிகம். கிருஷ்ணராயபுரத்தில் இருந்த இவருடைய மாமாவும் மிகவும் கோபக்காரர். தம் தந்தையாரின் கோய குணமும் அம்மானின் கோப குணமும் இவரைப் பற்றிக்கொள்ள வில்லை. நல்ல வேளையாக இவர் ஐயரிடம் வந்து. சேர்ந்துவிட்டார்! ‘. . . . . . . . . . . ...

நா-9