பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 நாம் அறிந்த கி.வா.ஜ.

இருக்கின்றன?’ என அவர் கேட்டபோது, இவருக்குச் சிரிப்பு வந்தது.

  • நான் செய்தது ஒரு பகுதிதான். சருகரீத்தேன். குளிர் காய நேரமில்லை. நான் தேடித் தொகுத்து ஆராய்ந்து வைத்திருக்கும் நூல்கள் இன்னும் பல மடங்கு உள்ளன. ஒவ்வொன்றாகச் செய்துகொண்டு வருகிறேன். எனக்கும் வயசாகிக்கொண்டு வருகிறது. முதுமையின் தளர்ச்சி அதிகமாக இருக்கிறது’ என்றார் ஐயரவர்கள். ‘இன்னும் பல வருஷங்கள் இருப்பீர்கள். கொள்ளுப் பேரனைப் பார்க்கவேண்டாமா? அவன் ைக யா ல் கனகாபிஷேகம் பண்ணிக்கொள்ள வேண்டாமா?’ எனச் சொன்னதோடு திருமணத்தைச் சில மாதங்கள் தள்ளி வைத்துக்கொள்ளவும் சம்மதித்தார். வந்தவர்

அ வர் விடை பெற்றுச் சென்றபின் ஜயரவர்கள் இவரிடம் சொன்னார் : -

கொள்ளுப் பேரனைப் பார்க்கவும், கனகாபிஷேகம் செய்துகொள்ளவும் இன்னும் பல வருஷங்கள் நான் இருக்க வேண்டுமென்று அவர் வாழ்த்துகிறார். இருப்பதில் எனக்கும் பிரியந்தான்; அவர் சொல்லும் காரணத்திற்காக நான் வாழ விரும்பவில்லை. o

“இதுகாறும் அச்சில் வராத நூல்களைக் குறிப்புரை யோடும், நல்ல முகவுரையோடும் அச்சிட்டுப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கிறது. அச்சிட்ட நூல்களுக்குப் பரம்பரைக் கேள்வியாலும், ஆராய்ச்சி யாலும் நான் அறிந்து வைத்த குறிப்புகளைத் தொகுத்துத் தனித்தனியே வெளிப்படுத்த விரும்புகிறேன். இதற்காக வாவது வாழ வேண்டுமென்று நான் நினைப்பது உண்டு. ஆனால், இப்படி இருக்கக் கூடாது! நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பதற்கு வேண்டிய அநுகூலங்கள் இருக்க வேண்டும். திடீரென்று உலகத்தை விட்டுப் பிரிய

  • 7 - 12 - 41 - இல் கொள்ளுப் ப்ேரர் வேங்கட

கிருஷ்ணனால் கனகாபிஷேகம் நடைபெற்றது.