பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பின் உருவம்

முயற்சி என்பது இன்றியமையாத ஒன்று தான் என்றாலும் இயல்பாகவே ஆற்றல் படைத்தவர்களுக்கு அதைவிடப் பெருமை தருவது திடமான தெய்வபக்திதான். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர், என் போன்றோர்க்குத் தமிழ் ஆசானாகவும், அதே சமயத்தில் கலைமகள்’ பத்திரிகை ஆசிரியராகவும் திகழ்ந்த கி.வா.ஜ. அவர்களே. இது வெறும் புகழ்ச்சி இல்லை; அவருடன் ஐம்பது ஆ ண் டு க ள் உ த வி ஆ சி சி ய னா க வும், அதே நிறுவனத்தின் மாதக் கதம்பமான மஞ்சரி'யின் துணை ஆசிரியனாகவும் தலைமை ஆசிரியனாகவும் இருந்து பழகியதால் அறிந்த உண்மை. - ... •

தனித்தமிழ் வித்துவான் தேர்வுக்காக அவரிடம் சங்க இலக்கிய-இலக்கணங்களை எங்கள் அலுவலக இடைவேளை ஒய்வு நேரத்தில் பாடங் கேட்கும்போது மிகத் .ெ த வி வா. க எனக்கு எ டு த் து ைர ப் பார். கலை மகளைத் தொடங்கிய பெரியவரான ரா: நாராயண சாமி ஐயர் மிக்க ஆர்வமுடன் இதைக் கவனித்து மென்னகை புரிவார். அந்த நாளில் தெய்வ வழிபாடு பற்றி அக்கறை கொள்ளாத வாலிப நிலையில் இருந்தேன். ஒரு சமயம் கந்த புராணம் பாடஞ் சொல்லும்போது கி.வா.ஜ., அவர்களின் கண்களினின்று நீர் தாரைதாரை யாக வழிவதைக் கண்டு திகைத்துவிட்டேன்; ஏன், ஐயா அழுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் தம் கண்களைத் துடைத்துக்கொண்டு சற்றே சிரித்தபடி, ‘முருகனது திருவுருவத் தோற்றத்தைக் கச்சியப்பர் வர்ணிப்பதைக் கேட் டா யே: அ.த ன் விளைவு தான் இது’ என்னும்போதுதான், எந்தவித உணர்ச்சியு மற்ற மரக்கட்டை போன்ற என் நிலையை உணர்ந்து