உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காட்சி 17. மலையப்பர்:- குத்துச்சண்டை போட்டி எதற்காக என்று நினைத்தாய்? கிராம மக்களை குதூகலப்படுத்தவா? இது தானா எங்களுக்கு வேலை? அந்த நாயைக் கொல்ல வேண் டும்? பரமசிவம்:- கொல்றதுன்னா இலேசான காரியங்களா? தோற்கடிச்சுட்றேன். மலையப்பர்:-நீ வீராதிவீரன் என்று வெற்றி மாலை சூடு வதல்ல - எனக்கு வேண்டியது. அவனைக் கொல்லவேண் டும். பரமசிவம்:-அப்படி என்றால்... மலையப்பர்:- தவறான முறையில் சண்டையிடு ! பரமசிவம்:-குத்துச்சண்டை சட்டப்படி குற்ற மாச்சு துங்களே... மலையப்பர்:- சட்டம் ! என்னிடம் சரணடையும் ! தூக்கு மேடையில் இருப்பவனை காப்பாற்றும் துணிவு எனக் உண்டு! பாவம், புண்ணியம், நேர்மை, நீதி, இரக்கம், சட் டம், சம்பிரதாயம் இவைகள் என்னிடம் செல்லாது. அஞ் சாதே பரமசிவம் ! அவனை நீ கொல்லவேண்டும் ! அதைக் கண்டு என் மனம் குளிரவேண்டும். (குமரனுக்கும்-பரமசிவத்துக்கும் குத்துச்சண்டை போட்டி நடை பெறுகிறது. பரமசிவம் தோல்வி அடை கிறான். குமரனுக்கு கிராம மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.) குமரன் :-உங்கள் அன்பிற்கும், ஆர்வத்திற்கும் நான் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறேன்? க ஒருவன்:- தம்பி ! இன்னிக்குத்தான் நாங்க சந்தோஷத் தைக் கண்டிருக்கிறோம். பசி,பட்டினி, அடி, உதை கள்தான் இங்கு ! குமரன் :- என்ன வை செய்வது? அந்த உயில் மட்டும் அகப்பட்டு விட்டால் இந்த ஜமீனையே உங்களுக்கு சொந்து,