உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 17 சொந்தக்காரன் இன்னும் உயிருடன் தான் உலாவுகிறான். அவனை ஒழித்தால் தான் எனக்கு நிம்மதி. ஞானம் :- ஒழிந்து விடுவான் ! மலை :- எப்படி ஒழிவான் ? நீ மாத்திரம் நிதானமாக அந்த விஷத்தை கொடுத்திருந்தால் அவன் அன்றே ஒழிந்திருப் யான். ஞானம்:- நான் என்ன செய்வேன் ? மீனா அவனுக்கு வைத்திருந்த பாலில் தான் விஷத்தை கலந்தேன். அதை அவன் அவனது தாய்க்கு கொடுப்பான் என்றா எனக்குத் தெரியும்? (இதைக் கேட்ட குமரன் மீனாவை நிரபராதி என்று அறிந்து வெளியேறுகிறான்.) இடம்:-கல்லறை. காட்சி 21. மணமில்லா மலர் நானம்மா ! மாதர் உலகில் வாழ்வே அறியா மணமில்லா மலர் நானம்மா ! ஒடிந்து வீணை நாதமே இனியேது இடியிதோ வீழ்ந்தே பூங்கா அழிந்ததே மணமில்லா மலர் நானம்மா! வாழ்விலே விஷமே வீசியே மறைந்ததால் மணமில்லா மலர் நானம்மா ! வாடிடும் கொடியானேன் சூறாவளிக் காற்றாலே மகரந்த இதழ்மிது மாசு தோய்ந்து மூடிய மணமில்லா மலர் நானம்மா!