உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும:-உங்கள் கண்ணீரைக் கண்டு மாரி-பன்னீரில் மயங்கி விடுவாள் கருணை காட்டாது. என்றால்...நீங்கள் அவளை ஏமாற்றுகிறீர்கள் என்று தானே அர்த்தம். ஜீவா :- அதுவும் சரிதான் ! நீ சொல்றதும் உண்மை தான்! ஆமா...நீங்க யாரு ? எந்த ஊர்? நாராயணி : (கும்ரனின் தாய்) நாங்க வெளியூர். சஞ்சீவி வைத்தியரை பார்க்கணுமனு வந்தோம். அவரு வீடு... ஜீவா :- சஞ்சீவி வைத்தியரா......? அவரு வீட்டிலே தான் இருப்பாரு ! இல்லேண்ணா விஷமூலிகை தயாரிக்கிற குடிசை ஒண்ணு இருக்கு! அங்கே இருந்தாலும் இருப் பாரு ! எதுக்கும் கொஞ்சம் அப்படிப் போயி விசாரித்துப் பாருங்க. கும :- வர்றோமுங்க! (ஜீவானந்தர் போய் விடுகிறர்.) நாரா : ஏம்பா... அங்கே இப்படி பேசிப் பேசித்தான் இந்த ஊருக்கு வந்தோம். இங்கேயும் வந்தவங்க-போன வங்க கிட்ட ஏன் வம்பு பேசுறே? கும :- வம்பு இல்லேம்மா... சிறு விளக்கம், மழைக்கும் - மாரிக்கும் உள்ள தொடர்பை பற்றி......! நாரா :- சரி... சரி... வா போகலாம். எல்லோரும் ஆண் (கோவில் பூசை நடந்து முடிகிறது) (பாட்டு) மாரி மகமாயி மாரி மகமாயி ஆயி எங்கள் காளியம்மா மாரி மகமாயி மாரி மகமாயி ஏழை நாங்கள் எல்லோரும் வாழ மாத மும்மாரி பொழியனும் தாயே. சூரியனால் கடல் நீரும்-மேகமாசவே மாறியதால் லோகத்திலே மழையும் பொழியுமா ..