பக்கம்:நாயகர் பெருமான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

னவர்கள் சென்ற திக்கில் செலுத்தினார். சில நாட்களில், பெருமானவர்களின் படைகளோடு அவரும் சென்று சேர்ந்து கொண்டார்.

25. வள்ளல் பெற்ற திருமகள்

எமன் மாநிலத்தில் தை என்ற கூட்டத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தூண்டுதலால் இஸ்லாத்திற்கு எதிர்ப்பாகக் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. ஹஸரத் அலியவர்களைப் பெருமானவர்கள் அங்கு அனுப்பிக் குழப்பத்தை அடக்கி வரப் பணித்தார்கள்.

ஹஸரத் அலியவர்கள் வரும் செய்தி யறிந்து அம் மாநிலத்தின் தலைவனான அதி என்பவன் பயந்தோடி விட்டான். தலைவனற்ற அக் கூட்டத்தாரை எளிதில் அடக்கி, அவர்களில் பலரை அடிமையாக்கிக் கொண்டும் பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டும் மதீனாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

சிறைப்பட்டவர்களிலே அதியின் உடன் பிறந்தவளான ஸபானா என்ற மங்கையும் இருந்தாள். அவள் பெருமானவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப் பட்டவுடன், அவர்களை நோக்கி, “ஆண்டவனுடைய தூதரே, என் தந்தை இறந்துவிட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய உடன்பிறந்தவனோ ஓடிச் சென்றுவிட்டான். இந்நிலையில் என்னை மீட்பதற்கு யாரும் இல்லை. ஆகவே, தாங்கள் கருணைகூர்ந்து பொருள் எதுவும் எதிர்பாராமல் என்னை விடுதலை