பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக காயஞர் 79

பின் திரு நந்தவனம் சென்று, அலரும் பருவத்தில் உள்ள மலர்களைப் பறித்துப் பூக்குடலைகளில் தொகுத்துக் கொணர்வார். அவற்றைத் தூய்மையான ஓரிடத்தில் கொணர்ந்து வைத்துக்கொண்டு இறைவனுடைய அலங் காரத்துக்கு ஏற்கும் வகையில் பலவித மாலைகளைத் தொடுப்பார். தலையில் அணியும் இண்டை, மார்பில் அணியும் தார், பெரிய மாலையாகிய தாமம் என்று மாலை களில் பல வகை உண்டு. எந்த எந்தக் காலத்தில் எவை எவை வேண்டுமோ அவற்றை அழகாகத் தொடுப்பார்.

அவ்வாறு மாலைகளைத் தொடுத்து, பிறகு அவற்றைத் தாங்கி ஆலயம் சென்று இறைவனுக்குச் சாத்தி, அழகு பார்த்துக் கண்ணிர் மல்க நின்று உருகுவார். விடுதிப் பூக்களால் அருச்சனை செய்து இன்புறுவார்.

இந்தத் திருப்பணி செய்வதோடு எப்போதும் எம்பெரு மானுடைய நீ பஞ்சாட்சரத்தை இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருப்பார். . . ."

முருக காயருைக்கு வர்த்தமானச்சரத்தில் மிகுதியான ஈடுபாடு. அந்தச் சங்கிதியில் அவர் இந்த மலர்த் தொண்டை முட்டின்றிச் செய்து வந்தார். -

அவர் திருப்புகலூரில் ஒரு மடம் கட்டிக்கொண்டு வாழ்ந்தார். இப்போது அவ்வூரில் கிடைக்கும் கல்வெட்டு ஒன்றில் கம்பி முருகன் திருமடம்' என்ற குறிப்புக் காணப்படுகிறது. அது முருக காயனர் கட்டிய திருமடத் தைக் குறிக்கிறது என்றே தோன்றுகிறது. முருக்காயனர் மடத்தில் திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத் கொண்டர், திருலோக்கர் ஆகியவர்கள் வந்து தங்கினர்கள்.

திருஞான சம்பந்தப் பெருமான் முருக நாயனருடைய திருத்தொண்டைக் கண்டு அவர்பால் மிக்க அன்பு பூண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/85&oldid=585579" இலிருந்து மீள்விக்கப்பட்டது