பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாரூர்ப் பிறந்தார் 95

தலம் என்று சொல்வார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரிருல் தங்கிப் பரவை நாச்சியாரோடு இல்லறம் கடத்தி வந்தார். அவர் இல்லறம் கடத்திலுைம் அது சிவ யோகத்தைப் போன்று இருந்தது என்று சேக்கிழார் வருணிக்கிருர். -

திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் மூலலிங்கத்திற்கு வன்மீக நாதர் என்று பெயர், அங்கேயுள்ள சோமாஸ் கந்த மூர்த்தி தியாகராஜப் பெருமான். சைவத்திற்கு முக்கியமாக இரண்டு ராஜாக்கள் உண்டு. ஒரு ராஜா நடராஜப் பெருமான். சிதம்பரத்தில் இருக்கும் நடராஜா வைச் சிறந்த மூர்த்தியாகப் போற்றி வழிபடுகிறவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் தியாகராஜா கொடையில் சிறந்தவர்.

'அடிக்கு ஆயிரம் பொன் இறைக்கும் ஐயர்' என்று அந்தப் பெருமானப் பாராட்டுவார்கள்.

திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே சிவகணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு கம்பிக்கை. சிவலோகத்தில் இருக்கிற எம்பெருமான் சில காரணங்களுக்காகத் தம் முடன் இருந்து தொண்டு செய்யும் கணங்களைத் திருவா ரூரில் பிறக்கும்படி ஏவினராம். அவருடைய தரிசன மாத் திரத்தால் கல்லவர்கள் நன்மை பெறுவார்கள். ஆகையால் திருவாரூரில் பிறந்தவர்கள் அத்தனை பேரையும் தொகை அடியாராக வைத்துப் பாராட்டினர் சுந்தரமூர்த்தி சுவாமி கள். அவரைப் பின்பற்றிச் சேக்கிழார் சுவாமிகளும் இரண்டு பாடல்களால் திருவாரூரில் பிறந்தாராகிய தொகை அடியார்களைப் பாராட்டுகிரு.ர். -

"அருவாகவும், உருவர்கவும் எல்லாப் பொருளாகவும் சிவபெருமான் கிற்கிருன். அந்தப் பெருமான் திருக்கோயில் களில் திருவுருவம் கொண்டு அடியார்கள் போற்ற எழுங் தருளி யிருக்கிருன். ஞான வாசனை வீசுகின்ற பூங்குழலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/101&oldid=585735" இலிருந்து மீள்விக்கப்பட்டது