பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாயன்மா கதை

சிறந்த தோற்றமுடைய பேரூராக அது விளங்கியது. அங்கங்கே உள்ள மண்டபங்களில் எப்போதும் திருப்பதிக இசை நிலவும். அணியரங்குகளில் மகளிர் ஆடல் பயில்வார்கள். அங்குள்ள மடங்களில் இடைவிடாமல் அடியவர்களுக்கு உணவு அருத்திக் கொண்டிருப்பார்கள்.

கடற்கரையை அடுத்துள்ளது திருவொற்றியூர். கடற் கரையில் நிலவு பரந்தது போல மணற்பரப்பு விரிந்து கிடக்கும். புன்னே, புலிநகக் கொன்றை, தாழை ஆகிய நெய்தல் சில மலர்களின் மணமும், மாதவி, செண்பகம், செருந்தி ஆகிய பிற மலர்களின் மணமும் இணைந்து வீசும்.

இறைவன் திருக்கோயிலில் பல வகை வாத்தியங்கள் எப்போதும் முழங்கிக் கொண்டே இருக்கும். கடலின் ஒலியும் இடைவிடாமல் கேட்கும்.

அந்த நகரில் சக்கரப்பாடித் தெரு என்று ஒரு தெரு. உண்டு. அங்கே எண்ணெய் வாணிகர் பலர் வாழ்ந்து, வந்தார்கள். அவர்களுக்குள் கலியனர் என்பவர் ஒருவர். செல்வம் கிறைந்த குடியில் பிறந்தவர் அவர். பொருட் செல்வத்தோடு இறைவனிடம் ஆழ்ந்த அன்பு வைத்து, ஒழுகும் பண்புச் செல்வத்தையும் அவர் பெற்றிருந்தார்.

இறைவன் திருக்கோயிலில் தம்மால் செய்வதற்குரிய திருத்தொண்டு இன்னதென்று தேர்ந்து, ஒற்றியூருடைய பெருமான் ஆலயத்தில் உள்ளேயும் வெளியேயும் வரிசை வரிசையாக விளக்குகளே வைத்து ஏற்றி இன்புற்ருர். இரவும் பகலும் இடைவிடாமல் திருவிளக்குப் பணியை அவர் செய்து வந்தார்.

பல ஏவலர்களே வைத்தும் தாமே கேரில் இருந்தும் இந்தத் திருப்பணி முட்டாமல் நடைபெறும்படி செய்து வந்தார், கலியனர். இறைவன் செய்த சோதனையால், ! அவரிடம் இருந்த செல்வம் வர வாக் கரைந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/58&oldid=585692" இலிருந்து மீள்விக்கப்பட்டது