பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருத்துணை நாயனுர் 81

ராதவின் அந்தப் பெயர் வந்ததென்று தோன்றுகிறது. வேளாண் குடியிலே பிறந்த அவர் இறைவனிடத்தில் மெய்யன்புடையவராகிப் பல திருத் தொண்டுகளேச் செய்து வந்தார். திருவாரூர்த் திருக்கோயிலில் ஈடுபாடு மிக்கவர் அவர். அங்கே உரிய காலங்களில் சென்று திருத் தொண்டுகளைச் செய்து வந்தார். -

ஒரு நாள் பல்லவ அரசனும் அவனுடைய பட்டத் தாசியும் அங்கே தரிசனத்துக்கு வந்தார்கள். திருவலங்கல் கட்டும் மண்டபத்துக்கு வந்தபோது புறத்தே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள் அரசி. அதனைச் செருத்துணையார் பார்த்தார். அவருக்கு அச் செயல் பொறுக்கவில்லே. அரசி மோந்து பார்த்தது புறத்தே விழுந்து கிடந்த சிறு மலர்தான். செருத்துணையார் அரசி யின் மனே பாவத்தை எண்ணிஞர். இந்தச் சிறு மலரைச் சிவனுக்குரியது என்பதை மறந்து மோந்து பார்க்கும் இச் சிறு செயலே பின்பு இன்னும் பெரிய அபசாரங்களேப் புரியக் காரணமாகும்' என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். பாம்பில் குட்டியென்றும் பெரிதென் றும் வேற்றுமை இல்லை. சிவாபசாரத்திலும் சிறிது பெரி தென்று அளவு காணக் கூடாது.-இப்படி யெல்லாம் ஓடிய அவர் சிங்தையிலே கோபம் மூண்டது. -

உடனே அரசியைப் பிடித்து வீழ்த்தி அரிவாளால் மலரை மோந்த மூக்கை அறுத்துவிட்டார். அவருக்கு அப்போது சிவாபசாரம் நேர்ந்துவிட்டதே என்ற எண்ணம் ஒன்றுதான் இருந்தது. தாம் செய்யப் போகும் செயலின் விளைவை அவர் நோக்கவில்லை. இந்தச் செயலைச் செய்தார் யார் என்று கவனிக்கவில்லை. மலரை மோந்தது ஒரு மூக்கு; அதைத் தடிந்து விட்டார்.

இது சமுதாய அறத்திற்கோ, தனி மனிதனது அறத் திற்கோ இணங்கிய செயல் என்று சொல்வதற்கு இல்லை.

r தா. க-8 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/87&oldid=585721" இலிருந்து மீள்விக்கப்பட்டது