பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நாயன்மார் கதை

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் திருத்தொண் டில் ஈடுபட்டவர் சுந்தரர். 'சொற்றமிழ் பாடுகென் ருர் துரமறை பாடும் வாயார் ஆதலால், அவனருளே துணை யாகத் திருப்பதிகங்களே இசையுடன் பாடலானர்.

"மந்தம் முழவம் இயம்பும் வளவயல் நாவலா ரூரன்

சந்த மிசையொடும் வல்லார்"

'ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும்'

'பாடல் பத்தும், உன்னி இன்னிசை பாடுவார்"

என்பவற்றில் சுந்தரர் இசையுடன் பதிகங்களைப் பாடினர் என்பது புலனாகும். அவர் இசையில் வல்லவராகத் திகழ்ந்தவர். அந்த இசையறிவு தாயாரிடமிருந்து கருவோடு வந்தது என்று கொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா ?

சிவபெருமானிடம் பேரன்பும் அறநினைவும் உள்ள இசை ஞானியார் திருவயிற்றில் ஆலால சுந்தரர் திருவவ தாரம் செய்ய வேண்டுமானல், அப்பெருமாட்டியாருடைய புண்ணியப் பயனே அளவிட்டு உரைக்க ஒண்னுமோ? திருத்தொண்டர் புராணசாரம் பின் வருமாறு அவரைப் போற்றுகிறது. - -

'நாவற் றிருப்பதிக்கோர் செல்வச் சைவ

நாயகமாம் சடையனர் நயந்த இன்பம் பூவை குலமடந்தை பொற்பார் கொம்பு

புனிதமிகு நீறணிந்து போற்றி செய்தே ஆவிற் றிகழ்தக்லவன் வலிய ஆண்ட

ஆரூரர் அவதரிக்க அருந்தவங்கள் புரிந்தார் யாவருக்கும் எட்டாத இசைந்த இன்ப -

இசைஞானி எனஞானம் எளிதாம் அன்றே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/30&oldid=585770" இலிருந்து மீள்விக்கப்பட்டது