பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நாயன்மார்கள் அறுபத்து முவர் தொகையடியார் ஒன்பது வகையினர். இந்த எழுபத்திரண்டு பேர்களின் வரலாறுகளையும் சேக்கிழார் விரிவாகப் பெரிய புராணத்தில் பாடினர். அந்த வரலாறுகன் உரைநடையில் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமிர்தவசனி’ ஆசிரியர் சு. முத்துசாமி ஐயரவர் கள் தம் பத்திரிகையில் நாயன்மார் வரலாற்றுப் படங்கள வெளியிட இருப் பதாகவும், அந்தப் படங்களுக்கு விளக்கமாக நாயன்மார் வரலாற்றைச் கருக்கமாக எழுதித்தர வேண்டும் என்றும் கேட்டார். அப்படியே எழுதிவந்தேன். சுந்தரமூர்த்தி நாயனர் வரலாற்றை இறுதியில் விரிவாக எழுதிப் பிறகு சேக்கிழார் வரலாற்றையும் எழுதி முடித்தேன்.

இடையில் காமகோடிப் பிரதிபத்தில் திருஞானசம்பந்தர் சரித்திரத்தை எழுதும்படி ரீ கே. பாலசுப்பிரமணிய ஐயர் பணித்தார். அதில் விரிவாக அவ் வரலாற்றை எழுதினேன்.

என் உழுவலன்பரும் அமுதநிலையம் தலைவருமாகிய ரீ ரா. ரீ. நீகண்டன் அவர்கள் இவற்றைப் புத்தக உருவில் கொண்டுவந்தால் பலரும் படித்துப் பயன் பெறுவார்கள் என்று சொன்னர், அவர் விருப்பப்படியே இவற்றைத் தொகுத்து நான்கு பகுதிகளாக வெளியிடலானேன். முதல் பகுதியில் நமிநந்தி யடிகள் நாயனர் வரலாறு முடிய இருபத்தேழு தொண்டர் வரலாறுகள் வெளியாயின. இரண்டாம் பகுதி முழுவதும் திருஞானசம்பந்தர் வரலாருகவே அமைந்தது. முன்ரும் பகுதி ஏயர்கோன் கலிக்காம நாயனர் முதல் திருவாரூர்ப் பிறந்தார் வரையிலுள்ள 33 தொண்டர்களின் வரலாறுகள் அடங்கியதாக அமைந்தது. இந்த நான்காம் பகுதியில் முப்போதும் திருமேனி தீண்டுவார் முதல் இசைஞானியார் வரையிலுள்ள பத்துத் தொண்டர்களின் வரலாறும், சுந்தர முர்த்தி நாயனர் வரலாறும் உள்ளன. இவற்ருேடு, பெரியபுராணத்தில் நகரச் சிறப்பாக அமைந்துள்ள மனுநீதிச்சோழன் வரலாற்றையும், திருமுறை கண்ட வரலாற்றையும் புதியனவாக எழுதிச் சேர்த்து, இறுதியில் சேக்கிழார் வரலாற்றை பும் இனத்தேன். ஆகவே இப்பகுதியில் பதின்ைகு வரலாறுகள் உள்ளன.

இவற்றை எழுதுவதற்குக் காரணமான திருவருளுக்கும், அமிர்தவசனி', காமகோடிப் பிரதீபம்' பத்திரிகாசிரியர்களுக்கும், அமுத நிலையம் தலைவருக்கும் என் நன்றியறிவு உரியது. -

х காந்தமலே " } கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர், சென்னை-28 26—11—162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/5&oldid=585745" இலிருந்து மீள்விக்கப்பட்டது