பக்கம்:நாராயணன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றும், அவ்விதம் ஒருமுறை தவற நேர்ந்தால் பிறகு, அக்குற்றம் என்றும் நேராதபடி பார்த்துக்கொள்வதே சிறந்த பிள்ளைகளுக்கு அழகு என்றும் அந்த ஆசிரியர் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

 அன்றுமுதல் பிள்ளைகள் யாவரும் நாராயணனைச் 'சத்திய நாராயணன்' என்றே அழைக்க ஆரம்பித்தனர். நாராயணன், மாணிக்கம், கோவிந்தன், கந்தன், முருகன் முதலியோர் முன்பு போலவே பிரியாத தோழர்களாய் இருந்ததோடு நாராயணன் சொற்படியே நடந்து நல்ல பெயரும் எடுத்தார்கள்.
  அந்தச் சிறுவர்களால் அப்பாட சாலைக்கும் நல்ல பெயர் உண்டாயிற்று. நாராயணன்  தாய்தந்தையர் அப்போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா! அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக் அவ்வீர்கள் அப்போது மகிழ்ச்சியுற்றனர்.

“ ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்

                   தன்மகனச் 

சான்றோன் எனக்கேட்ட தாய் "

                    -குறள்.

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/63&oldid=1340541" இலிருந்து மீள்விக்கப்பட்டது