பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 37 ஆதலால் வடதிசைக்கண் தோன்றும் அருந் ததியை ஒக்கும் கற்பனையும் மெல்லிய மொழியி னையும் உடைய அரிவையைத் தவிர நின்னுடைய தென்று சொல்ல ஒரு பொருளையும் நீ பெற்றிலை; எனினும் நீ, செருக்குடன் இருக்கின்றாய்; இதற்குக் காரணம் என்னை?' என்று அவனது ஒப்பற்ற: ஈகைத் தன்மையை வியந்து பாடினார். பிறகு புலவர் தமக்குள், "கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன், மது நுகர்ந்து மகிழாது, பிறர்க்கு வழங்கிய பொற்படைகளால் அணியப் பட்ட உயர்ந்த தேர்கள், பயன் பொருந்திய முள்ளுர் மலையுச்சியின்கண் உண்டாகிய மழையி னது துளியினும் பலவாகும். எனவே, அவன் .பிறர்க்குத் தேரை வழங்குதல் எளிது. அவனது நாளோலக்கம் மகிழ்ச்சியைத் தருவதாகும்' என்று காரி தேர் வழங்கும் பெருமையைக் கூறி வியந்தார். பின்னர் ஒருகால் புலவர், ஒழுங்குபட இசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய பெரும்ை பொருந்திய மலையையுடையோனைப் பாடிய வர்கள், நல்ல நாள் அல்லாவிடினும் புள் நிமித்தம் இடையே நின்று தடுப்பினும், செவ்வி இல்லை எனச் சென்று கூடினும் நல்லவை அல்லாத முனி .யும் வார்த்தைகளைச் சொல்லினும் வறிதாக மீளக்கூடியவர்கள் அல்லர்" என்று விழுமிய கருத்தை உள்ளடக்கிய பாட்டு ஒன்றினைப் பாடி :னர். இச் செய்யுளால், பாடிச் செல்வோர், காரியி .டம் பரிசில் பெற்றே மீள்வர் என்பது புலப்படு: