பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கியோன் உரை "நாற்பெரும் புலவர்கள்' என்னும் இச்சிறு நூல், "சீத்தலைச் சாத்தனார், கபிலர், பரணர், நக்கீரர், என்னும் பெரும்புலவர் நால்வரைப் பற்றிக் கூறுவது. இந்நால்வரும் "பெரும்புலவர்' என்பது சங்கநூற் பயிற்சி உடையவர் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த முடிபாகும். இப் பெரியார் தம் வரலாறுகளால் அக்கால அரசர், வள்ளல்கள், புலவர், தமிழ்மக்கள் முதலியோர் நாகரிகம், குணாதிசயங்கள் இன்ன பிறவும் இனிதின் அறியலாம். நூல்கள் வாயிலாக இவற்றை அறிந்தவர் மிகச் சிலரே ஆவர். ஆதலின், இளைஞர்கள் எளிதில் இவற்றை அறிய வேண்டும் என் னும் பேராவலே இதனை எழுதுமாறு என்னைத் தூண் டியது. இதைத் தமிழர் அனைவரும் வரவேற்பதே ஆதலின் தமிழறிஞரும் நன்னோக்கம் தமிழ்ப் புலவரும் இந் நூலினைப் பெரிதும் ஆதரிப்பர் என்னுந் துணிபுடையேன். இத்தகைய தமிழ் நூல்களை ஆதரிப்பது, தமிழரை ஆதரிப்பதாகும்; தமிழைப் போற்றுவதாகும்; தமிழ் தாட்டின் மீது பற்றுள்ளம் கொள்ளச் செய்வதுமாகும். x இதனை நன்முறையில் பார்வையிட்டு உதவிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கட்கு யான் எழுமையும் கடப்பாடுடையேன். இந் நூ லி னை த் தந்நூலாகக் கொண்டு ஆதரிக்கும் அனைவர்க்கும் நன்றி யறிதல் உடையேன். * . - - - சேக்கிழார் அகம், - சென்னை. மா, இராசமாணிக்கம்