பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணர் 63 மதுரை மாநகரை எரித்துச் சேர நாட்டை அடைந்து, ஒரு மலைமீதேறி வானுலகம் புக்காள். இவ்வர் லாற்றைச் சாத்தனாரால் உணர்ந்த செங்குட்டுவன் தன் நாடு நோக்கி வந்த கண்ண கியைத் தான் வழிபடுதல் இன்றியமையாதது என்று எண்ணி, அவ்வம்மைக்குப் படிவஞ் சமைத் தற்குரிய சிலையை இமயமலையினின்றும் எடுத்து வந்து, படிவஞ் சமைத்துப் பூசனை செய்ய விரும்பி னான். அவன் மனைவி இளங்கோவெண்மாளும் கணவன் கருத்துக்கு இசைந்தனள். அரசன், குறித்த நாளில் தன் படைகளுடன் வடக்கு நோக்கிப் பிரயாணமாயினன்; முடிவில் உத்தர கோசலத்தை நெருங்கினான். அந்நாட்டரசர்கள் ஒன்று சேர்ந்து செங்குட்டு வனை எதிர்த்தனர்.அவனோ, இரை தேடிச் செல் லும் சீயம் யானைக் கூடடத்தைக் கண்டு பெரு மகிழ்வுடன் பாய்ந்தாற்போலப் பகை அரசர்கள் மேற் பாய்ந்து பெரும்போர் இயற்றினன்; முடிவில் ஏதிலர் சேனையைச் சின்னபின்னமாக்கி, யாவரை யும் கொன்று, பகையரசரான கனகன், விசையன் என்போரைச் சிறைப்படுத்தினான். எஞ்சிய பகைவர் பலவாறு வேடம் புனைந்து சிதறி ஓடினர். பின்னர்ச் செங்குட்டுவன் தன் தானைத் தலைவனைச் சிலருடன் அனுப்பி, இமயத்தி னின்றும், சிலையைக் கொண்டுவரச் செய்தான்; சிலை கொண்டுவரப்பட்டதும் சேரன், தான் சிறைப்படுத்திய கனகவிசயர் முடிமீது அச்,