பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பெரும் புலவர்கள் 1. சீத்தலைச் சாத்தனார் இருபுனலும் மலையினின்று வருபுனலும் ஆகிய முந்நீரையும் எந்நாளும் பெற்றிருப்பது நீர் நாடு எனப்படுஞ்சோணாடு. செந்நெல், கன்னல், மஞ்சள், இஞ்சி, வாழை, கமுகு, தென்னை முதலிய மருத வளங்களால் எந்நாட்டிலும் முன் நாட்டப் படுவது அந்நாடு. ஆறுகளும், பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும் அதற்கு அணி கலங்கள் போல் விளங்குவன. பச்சைக் கம்பளம் போர்த்தாற். போல விளங்கும் பசும்புல் வெளி களும், பயிர் நிலங்களும் காண்போரது கண்ணை யும் மனத்தையும் குளிர்விப்பன. நாட்டின் வளத் திற்கும் விளைவுக்கும் ஏற்பவே செல்வர்களும் கல்விமான்களும் அங்கு மிகுதியாயிருப்பர். இத்தகைய சோழ நாட்டிலே சித்தலை என்று பெயர் கூறப்படும் சிறந்த பதியொன்று உண்டு.