பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


உணர்வுக்கு முதன்மை தருவது. உள்ளத்துக்கு உலகை ஊட்டுவது; பள்ளத்தில் கிடப்பவரைத் துள்ளி எழச் செய்வது. இந்த அடிப்படையில் இவர்கள் எழுத்து எழுச்சி அமைந்தால் பாராட்டப்படுவர். வெறும் சொல்லடுக்குகள் கவிதை ஆகாது; இவர்கள் அவை ஏறுவதால் அறிஞர்கள் அங்கு இடம்பெறுவது இல்லை. கற்றவர்கள், சிந்தனைமிக்கவர்கள்; கற்பனை உள்ளவர்; இவர்களே அவை ஏறிக் கவிதை அரங்கேறத் தகுதி படைத்தவர் ஆவர்.

வெறும் சொல்லடுக்குகள் வேசியர் தம் புனைவு ஆகும். கற்ற அறிஞர் சொற்கள் கருத்து ஆழம் மிக்கவை; காசுக்கு என்று கவிதை பாடி ஓசைகளை எழுப்பித் தம்மைக் கவிஞர்கள் என்று பேட்டி அளித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்று ஒசைதான் கவிதை என்று மோசமான நிலையை அடைந்து விட்டது. விளக்கமாகக் கூறட்டுமா? திரைப் பாடல்கள் வெறும் இரைச்சல், கவர்ச்சிக் கன்னிகள் இவர்களை வைத்து ஆடவைத்து ஆபாசத்தை விற்பனை செய்கின்றனர். இப்படி எழுதுகிற திரைப்பட விமர்சனங்கள்; கவிதை ஒன்று இரண்டு சில கருத்துக் கொண்டவை. பல ஆட்டுக்கு ஏற்ற ஓசைத் தாளங்கள்; ஒரே கூளங்கள், இவை பாடல்கள்; மறுக்கவில்லை; கவிதைகள் ஆகா.

விளக்க உரை செய்தால் அதற்கு விருத்தி உரை என்று பெயர். தொல்காப்பியப் பாயிரத்துக்கு என்றே ஒரு விருத்தி உரை உள்ளது. இவ்வளவும் கூறவல்லவன் தமிழ்ப் புலவன். புலமை பெற்று உயர்பவனே அவை அறிந்து பேச வல்லவன் ஆகிறான்.