பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நாலடியார் செய்யுளும் செய்திகளும்இன்பம் இழுத்துப் பிடிக்கிறது; அது உன் வழியைத் தடுத்து நிறுத்துகிறது. நீ செல்லும் பாதை நேர்வழி, இன்பம் உன்னைத் தடுக்கும் பேர்வழி: அதனைப் பொருட்படுத்தாமல் கடமையை மேற்கொள்க. அது கடவுள் நெறி.

நாவின் சுவைக்கு அடிமையாவர் அவர் வெறியர்; பூவின் சுவைக்குப் பின்போவார் அவர் பூஜ்ஜியர்; நாதம் அஃது ஏதம்; உலக ஆசைகள் உன்னை விழுங்கும் பூதம். ஏணிப்படிகள் ஏறிச் சொர்க்கம் அடைய வேண்டும்; நீ ஏன் இப்படிப் பாம்பின் வாயில் அகப்படுகிறாய். துறவு கொள்க; அஃது உன்னை உயர்த்தும்.


7. மதங்கொண்ட யானை
(சினம்)

சினம் என்பது மதங்கொண்ட யானை; அதை அடக்கி ஆண்டால் அது பணிந்து நீ உயர ஏற வழிவகுக்கும். யானை மீது பவனி வர இந்த உலகம் உன்னைக் கண்டு பணியும்; பிறர் பகை தணியும். சினத்தை எப்படி அடக்குவது? கொசு தொல்லைதான். அதற்காக நீ வீட்டையே கொளுத்த முடியுமா? ஈ உன் கையில் உட்காருகிறது; அதற்காக அதனைத் துரத்த நீ உன் கையை வெட்டிக் கொள்ள முடியுமா? பிறர் தரும் தொல்லைகள் அதற்காகக் கடக்க வேண்டும் சினத்தின் எல்லைகள். சினம் நல்லது அன்று.