பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

39


இல்லாதவர்க்கு நல்குகிறான்; பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி வகுத்துவிட்டு எஞ்சிய ஈவு கொண்டு இன்புற்று வாழ்கிறான் நூற்றுக்கு நூறு அவன் வாழ்க்கையில் வாங்கும் மதிப்பெண். தானும் நிம்மதியாக வாழ்கிறான்; மற்றவர்களையும் வாழ விடுகிறான். உலகம் மகிழ, அம்மகிழ்வில் அவன் புகழ்வு காண்கிறான். நிறைவு அவன் மனம்; அதனால் அவனுக்கு இல்லை யாதும் குறைவு.

பாலும் தேனும் கலந்தால் இனிக்கும் என்பார் வள்ளுவர்; இப்படிச் செறுகிக் கிடந்தது நட்பு; இடையில் சிறிது விரிசல்; அந்தக் குரிசல் செய்வது தவறு; எனினும் நீ அதைத் துற்றித் திரியாதே. நட்பின் பரிசில் என்று அதனைப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்; மறுபடியும் பழக இயலவில்லை என்றால் சொல்லாமல் கொள்ளாமல் விலகி விடு.

கண்ணாடி சன்னல் நட்பு; உள்ளிருந்து கொண்டு கல் எறிந்தால் இருவர்மீதும் படும். வெளியே வந்துவிடு; கண்ணாடி உடைப்பானேன்? கல்லெடுத்து அடிப்பானேன்? மெல்ல அவனை விட்டு விலகிவிடு; கசப்புக் காட்டாமல் மெல்லக் கழற்றிக் கொள்; நட்பு நிலைக்கும்.

“பேயோடு உறவு கொண்டாலும் பிரிவு அரிது.” என்பர். அதனை விட்டு விலகப் பிடிக்காது; விலங்குகளும் பழகிவிட்டால் ‘காய்’ விட்டுக் கசந்து கழலுதல் செய்யாது; இசைந்தவர் பிரிதல் என்பது கசந்தது ஆகும். நண்பனிடம் கூடிவிட்டுப் பின் குறை கண்டு அவனை விட்டு ஓடிவிடுவது நாடத்தக்கது அன்று. ஒட்டி உறவாடிய பின் வெட்டி ஒதுங்குதல் கெட்டித்தனம்