பக்கம்:நாலடியார்-தெளிவுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 141

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து.

பொன் போன்ற நிறத்தையுடைய செந்நெற் பயிர்கள் எல்லாம், பொதிந்திருக்கும் கதிர்களோடு தம் கருவும் உட்பட வாடிக்கொண்டிருக்கமின்னல் விளங்காநின்றமேகமானது, தன் மழைநீரைக் கடலின் இடையிலே சென்று வெளிப்படுத்திச் சொரிதலும் உண்டு. அறிவின்மை உடையவர்கள், மேலான செல்வத்தைப் பெற்ற காலத்திலே, அவர்களுடைய வள்ளன் மையும் அப்படிப்பட்டதாகப் பயனற்ற தீயவர்களுக்கே உதவியாக விளங்கும்.

“அற்பர், தம் செல்வத்தைத் தகாதவர்களுக்குத் தருவார் களேயல்லாமல், தகுதி உடையவர்களுக்குத் தரமாட்டார்கள் என்பது கருத்து.

270. ஓதியும் ஒதார் உணர்விலார்; ஒதாதும்

ஓதி அணையார் உணர்வுடையார்; - தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர், இரவாதார், செல்வரும் நல்கூர்ந்தார், ஈயார் எனின். பகுத்து அறியும் அறிவு இல்லாதவர்கள், எந்த நூல்களையும் படித்திருந்தாலும், அவர்கள் படியாதவர் களேயாவர். பகுத்தறிவு உடையவர்கள், படியாதிருந்தாலும் படித்தாற்போற் சிறந்தவர்கள் ஆவார்கள். மனமானது தூய்மை உடையதாயிருக்க, வறுமையுற்றும் இரந்து செல்லாத்வர்கள் செல்வர்களேயாவர். செல்வம் உடையவரும், தம்பால் வந்த இரவலருக்குக் கொடாமற் போனார் என்றால், வறுமைப் பட்டவர்களே ஆவார்கள்.

‘உள்ளத் துய்மையே சான்றோர் என்ற மதிப்பைத் தரும்; ஈதலே செல்வத்திற்கு உரிய மதிப்பைத் தரும்.’

4. துன்ப இயல்

‘இன்பமும் துன்பமும் என்று சொல்லப்படுவன எல்லாம், அந்தந்த நிகழ்வுகளைப் பொறுத்தன அன்று; அவ்வவற்றைத் தத்தம் உள்ளத்திலே கொண்டு இன்பமாகவும் துன்பமாகவும் கருதி அநுபவிக்கும் உள்ளத்து நிலையினைப் பொறுத்ததே யாகும் என்று ஆன்றோர் கூறுவர்.