பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

வில்லை என்றால், பின்னால் வருந்துவாய் மதம் கொண்ட யானை! அது இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது; நிதமும் அறம் செய்து வாழ்ந்திருந்தால், அவன் அழிந்திருக்கமாட்டான்; அறம் அவனை அரவணைத்திருக்கும்; துணை நின்றிருக்கும். அறத்திற்கு இணை வேறு யாதும் இல்லை.

அறம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும்; நீ செய்த தவறு என்ன? நீயும் உன் மனைவியும்மட்டும் மகிழ்ந்து உண்டீர்; அரிசிச்சோறுதான்; வரிசைப்படுத்திச் சுற்றத்தவரோடு அதனை உண்க; அந்த மகிழ்ச்சி உனக்குப் புகழ்ச்சி செல்வம் தட்டை அன்று உருளை, அஃது உருண்டு கொண்டே செல்லும், வண்டியின் சக்கரமாய் இடம் மாறும் உள்ளபோது உவந்தது உண்க; உறவினரோடு உண்க.

அதோ, அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? “பட்டத்து யானைமீது பகட்டாகச் செல்பவன்; சேனைத் தலைவன்” என்று ஏனையோரை மருட்டினான்; இன்று அவன் பகைவரிடம் சிறைப்பட்டுவிட்டான்; நிறையுடைய அவன் பத்தினி பகைவன் கைப்பட்டுவிட்டாள். கட்டிய வளை இழந்து, ஒட்டிஉறவாட உறவினரும் இன்றி, இன்று ஆடி அசைந்து நாடி தளர்ந்து உலவுகின்றான். யாராவது நம்புவார்களா? இவன் ஒரு காலத்துப் பேரரசன் என்றாவது சொல்வார்களா? அன்று இவன் நாடாண்டான்; இன்றோ அவனை வறுமை ஆள்கிறது: அன்று காலாட்டினான்; இன்றோ காலம் அவனை ஆட்டிவைக்கிறது; காரணம் செல்வம் இழந்தான்.

“நிலைத்தது” என்று நினைத்தாய்; “அசைக்க முடியாது” என்று இசைத்தாய். நின்று நிலைத்தவை எல்லாம் கன்றி மறைந்துவிட்டன; அவை வரலாற்றுச் செய்திகள் ஆகி வருகின்றன.