பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

நடந்து கொள்ளமாட்டார்கள். பசி என்று அவர்களை நாடிச் சென்றால் புசி என்று ஏதாவது கொடுத்துத்தான் உதவுவார்கள்.

அடுக்கு மூன்று என்று வீடு மிடுக்காக இருக்கலாம். அங்குச் சென்றால் தம் நடுக்கம் தீரும் என்று அங்குச் சென்றால் ஒடுக்கம் காணார். வெளித்தோற்றம் கண்டு மயங்கினால் அது அவர்கள் குற்றமே. வீடு அழகாக இருக்கலாம்; உள்ளம் அழுகலாக இருந்தால் 'சாக்கடை' நாற்றம்தான் வீசும், சான்றாண்மை, மென்மைத் தன்மையாகிய இரக்கப் பண்பு, நல்லொழுக்கம் இம்மூன்றும் நற்குடிப் பிறந்வர்க்கே அமையுமே அன்றிப் பொருள் மட்டும் படைத்த செல்வர்க்கு அமையும் என்று கூறமுடியாது.

நற்குடிப் பிறந்தவர் அவர்கள் நடத்தையே தனித் தன்மை வாய்ந்தது ஆகும்; புதியவர்கள் வந்தால் உடனே எழுந்து அவர்களை அமரச் செய்ய அஞ்சலி செய்வர்; எதிர் சென்று வரவேற்பர்; வந்தபின் அவர்களை அமர வைத்து இன்னுரையாடி இனிமை கூட்டுவர்; அன்பு காட்டுவர்; விருந்து நல்குவர்; பின் அவர்கள் விடை பெற்றுச் செல்லும்போதும் அவர்களுடன் சில அடிகள் நடந்து 'சென்று வருக' என்று விடைதந்து அனுப்புவர். இவை எல்லாம் அவர்தம் நல் நடத்தைகள் ஆகும்.

இன்னார் இன்ன வீட்டார் என்றால் அவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் பிறர் காண்பர். அவர்கள் அடுக்கிய நன்மைகள் செய்யலாம்; அதை மற்றவர்கள் எடுத்துப் பேசிப் புகழ்வார் என்று கூறமுடியாது. அஃது அக்குடிக்கு இயல்பு என்று நவில்வர். வாய்விட்டுப் புகழமாட்டார்கள். அதே சமயம் சில தவறுகள் நிகழ்ந்து விட்டால் அது