பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 துன்பவியல் 31. இரத்தலுக்கு அஞ்சுதல் 'இந்த வறியவர் நம்மால்தான் செல்வர் ஆக முடியும்; தம்சொந்த முயற்சியால் ஈட்டும் செல்வம் உடையவராகார்’ என்று தம்மைத் தாமே பெரிதாய் அலட்டிக்கொள்ளும் மனமுடைய செல்வர் பின்னே, தாங்க ளு ம் தெளிந்த அறிவுடையவராயுள்ள நல்லோர் செல்வார்களோ? 301 ஒருவன் இறந்து மீண்டும் பிறக்கும் பிறப்பு என்பது, மூடிய கண்களை விழித்து இமைக்கின்ற அளவினது அல்லவா? எனவே, ஒருவன் (அழியும் உடலை வளர்க்க) இழி செயல்கள் செய்து வயிறு நிரம்ப உண்ணுவதனினும், பழிச்செயல்கள் செய்யாதவனுய்ப் பசித்து அ ழி த ல் தவருகுமோ? - - 302 (பொதுவாக உலகியலில்)ஒருசிலர், ஏழைமை காரணமாக இரக்கத் (யாசிக்கத்) துணிந்து இழிந்த வழியில் செல்லாமல் இருப்பதுமில்லை. ஆலுைம், மேன்மக்கள், எம் வீட்டிற்கு வருக விருந்து உண்க!' என்று விரும்பி அழைப்பவரிட மல்லாமல், மற்றவரிடம் தம் முகம் காட்டிச் செல்லுதலைச் செய்வரோ? - 303 திருமகள் தன்னைத் துறப்பினும், தெய்வமே சினந்து வருத்தினும், மேன் மகன், ஊக்கமான உள்ளத்துடன் உயர் நெறி நிற்றல்ை எண்ணுவ தல்லாமல், பொருளை இறுக்கி வைக்கும் அறிவிலிகளின் பின்ன்ே சென்று தலை வணங்கி நிற்கவேமாட்டான். - 304 மறைக்காது அளிக்கும் உறுதியான அன்புடைய கண் போல் சிறந்தவரிடத்தும் சென்று இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். இரப்பதை எண்ணும்போதே உள்ளம் நாணத்தால் உருகுகின்றதே? இரந்து ஒன்று பெற்றுக்கொள்ளும்போது பெற்றுக்கொள்பவரின் மனக் குறிப்பு எங்ங்ணம் கூசுமோ! 305