பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 பன்னெறியியல் தலையாயவர் நன்னூற்களைக் கற்பதில் காலங் கழிப்பர்; இடையாயார் நல்ல இன்பங்களே நுகர்ந்து காலம் போக்குவர்; கடைப்பட்டவர்கள், யாம் இனிய உணவு உண்டிலேம் - செல்வமும் நிரம்பப் பெற்றிலேம் என்னும் கசப்பால் துக்கம் இன்றிக் கிடப்பர். 386 அழகிய நெல் வயல் நிறைய விளையும் வளப்பமான மருதநில நாடனே! செந்நெல்லிலிருந்து உண்டான செழு மையான விதைமுளே மீண்டும் அந்தச் செந்நெல்லாகவே விளைவதால், மகனது அறிவு தந்தையிடமிருந்து வந்த அறிவே ! - - 367 பெருஞ் செல்வ முடையவரும் பெரியோரும் கெட்டுப் போக, வைப்பாட்டியின் பிள்ளைகளும் கீழ்மக்களும் வளர்ச்சி யுற, இப்படியாக, கடைசியில் கால்மாட்டில் இருக்க வேண்டியது தலைமாட்டிற்கு வந்துவிட, (விரித்துப் பிடிக்கும்போது கீழேயும் மடக்கித் தொங்கவிடும்போது மேலேயும் வந்துவிடும்) குடையின் காம்பைப் போல, உலகம் கீழ் மேலாய் நிற்கக்கூடியது. 368 மணிகளை வாரிக்கொண்டு வந்து வீழ்கின்ற அருவிகளே யுடைய வன்மையான நல்ல மலைநாடனே ! இனிய நண்பர் தம் உள்ளத்தில் உள்ள துன்பத்தை எடுத்துரைக்க வும், அத்துன்பத்தை நீக்க எண்ணுத நெஞ்சம் உடைய கொடியோர், வாழ்வதனினும் மலையினின்றும் கீழே வீழ்ந்து இறத்தல் நல்லது. 369 புது வெள்ளமும் பொலிவான காதணியுடைய வேசையர் தொடர்பும் ஆகிய இரண்டையும் பரபரப்பு இன்றி அமைதி யாக ஆராயின் இரண்டும் வேறல்லவாம். புதுவெள்ளமும் மழை அற்ருல் தானும் அற்றுப் போகும். வேச்ையர் அன்பும் பொருள் வருவாய் அற்ருல் தானும் அறும். 370