பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 நட்பியல் 够 & நட்பியல் 21. சுற்றத்தாரைத் தழுவிக் காத்தல் தாயானவள் கருக்கொண்ட மசக்கை நோயினையும் கருவைச் சுமக்குங் காலத்துத் துன்பத்தினையும் குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வலியினையும் மகனைத் தொடையின்மேல் வைத்துப் பார்க்குங்கால் மறந்து விடுவதுபோல, ஒருவன் தளர்ச்சியால் தான் உற்ற துன்பம், நலம் விசாரிக்கும் தன் நல்ல உறவினரைக் காணுங்கால் நீங்கப்பெறுவான். . . 201 வெப்பம் மிக்க காலத்தில் தன்னை அடைந்தவர்க் கெல்லாம் நிழல்தரும் நெடுமரம்போல எவரையும் ஒரு நிகராகக் கருதிக் காத்து, பழுத்த மரம்போல் தன்னிடம் பலரும் பயன் நுகர, தனக்குப் பற்ருமையால் தான் வருந்தியும் உயிர் வாழ்வதே நல்ல ஆண் மகனுக்கு உரிய கடமையாகும். 202 அடுக்கியதுபோல் அமைந்துள்ள மலைகள் நிறைந்த நாடனே தம்மை அடைந்தவரை எடுத்து ஆதரிக்க மாட்டோம் என்று பெரியவர் கூருர். மேலும் மேலும் திண்மையான காய்கள் பலப்பல காய்த்தாலும் அந்தத் தன் காய்களைத் தாங்க முடியாத கிளைகள் இல்லை. 203 சிறுமையுடையவரின் நட்பு முதலில் உலகம் அறியும்படி முற்றும் கலந்திருப்பதுபோல் காணப்படினும் பின்னர் நிலைக்காது; சில நாட்களேயிருந்து மறைந்துவிடும். என்றும் தளராத நல்லோரது நட்போ, தம்நிலையிலிருந்து மாருது ஒழுகும் தவத்தோர் நல்வழியடையத் தவநெறியில் நிலைத்திருப்பதுபோல் நிலைத்திருக்கும். 204 இவர் இத்தகையவர், இவர் இவ்வளவு உடையவர், இவர் எம் உறவினர், இவர் அயலார் என்று பாகுபடுத்திப் பேசும் சொல் ஒருசிறிதும் இல்லாத உயர்ந்த பண்புடன் பொருந்தி, தமக்கு அப்பாற்பட்ட மாந்தரின் துன்பத்தையும் போக்குப வரே, எவர்க்குள்ளும் மேன்மக்களாகக் கருதப் பெறுவர்.205