பக்கம்:நாலும் இரண்டும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சென்னை வானெலி நிலையத்தார் மக்கள் வாழ்வு ಲ್ಯೂವ್ಡ್ நல்லபல ஆக்கப் பணிகள் செய்து வருகின்றனர். அவற்றுள் ஒன்று-சிற்ந்தது விடியற்காலையில் குறள் விளக்கம் தந்தது. தற்போது நாலடியின் விளக்கம் நடைபெறுகின்றது. தொடக்கத்தில் பல அறக்கருத்துக்களும் குறள் அதிகார அடிப்பட்ை விள்க்கங்களும் நடைபெற்றன. விழித் தெழுந் ததும் எங்கும் வாழும் தமிழ் மக்கள் இந்த அறவுரைகளைத் தமிழிலேயே கேட்டு, வாழ்வினைச் செம்மைப் படுத்திக் கொள்ள முயன்றிருப்பாரன்ருே! . இத்தகைய பேச்சு வரிசையில் எனக்கும் இடமளித்தனர் வானெலி நிலையத்தார். குறள் அதிகாரம் பற்றியும் தனிக் குறள்கள் பற்றியும் ஐந்து முறையும் (ஒவ்வொரு முறையும் மூன்று நாட்கள்) நாலடி பற்றி இரு முறையும் பேசினேன். அவை இந்நூலில் முதல் இருபத்தொரு தலைப்புக்களில் வெளி வருகின்றன. பின் அறம் பற்றிய ஐந்து தலைப்புக்கள் இடம் பெறுகின்றன. (இவை நிகழ்ந்த நாட்கள் நினைவில்லை யாதலின் குறிக்கப் பெறவில்லை). எனவே இந்நூலில் நாலடியும் குறளும் பெரும்பான்மையாக அமைகின்ற மையின் இந்நூலுக்கு 'நாலும் இரண்டும்’ என்றே பெயரிட் டேன். செவிவழிக் கேட்ட தமிழ் மக்கள் முன் இந்நூலை வைத்து வணங்குகின்றேன். - என்னை இத்துறையில் ஆற்றுப்படுத்தியும் இந்நூல் வெளியிட இசைந்தும் துணைபுரிந்த சென்னை வானெலி நிலையத்தாருக்கு என் நன்றி. த்மிழ்க்கலை இல்லம், அன்புள்ள, சென்னை-30. * - 19-3–76 அ. மு. பரமசிவானந்தம்