பக்கம்:நாலு பழங்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 நாலு பழங்கள்

சில நாள் கழித்து மற்ருெருவன் வந்தான். அவ னிடம், 'கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட் டால் ஆதார வஸ்துவை வெளியில் எறிவாள்', என்ருர். அவனும், இவள் அதிசயப் பெண்ணுக இருப்பாள் போல் இருக்கிறது; நமக்கு உபயோகப் பட மாட்டாள் என்று எண்ணிப் போய்விட்டான். மறுபடியும் ஒருவன் வந்தான். அவனிடம் முன்னே சொன்ன இரண்டோடு மற்ருென்றையும் சேர்த்துச் சொன்னர். -

'கல்லைப் போட்டுச் சமைப்பாள். சாப்பிட்டால் ஆதார வஸ்துவை வெளியிலே எறிவாள். வேகாத இலையையும் வெட்டின காயையும் வெந்த கல்லையும் கலந்து கொண்டு வந்து வைப்பாள்.'

வந்தவன் அருண்டு போனன். சே, சே! இவள் பெண்ணு, பேயா? என்று எண்ணிக்கொண்டு போய் விட்டான்.

திரும்பவும் ஒரு புதிய இளைஞன் வந்தான். வித்தியாதரர் வித்தியாவதியின் சுபாவங்களை வரிசை யாக அடுக்கினர். இந்தத் தடவை மற்ருென்றையும் கூட்டிச் சொன்னர். 'வேகாத கட்டைக் குழம்பை ஊற்றுவாள்' என்று சேர்த்துச் சொன்னர். பாவம்! அந்த இளைஞன் ஒன்றும் பதில்:பேசாமல் போய் விட்டான். -

பின்னும் ஒருவன் வந்தபோது வித்தியாதரர். "அவள் இரண்டு மாட்டின் மேல்தான் படுத்துத் துங்குவாள்' என்பதையும் சேர்த்துச் சொன்னர் அவனும் வந்த வழியே போனன்.