பக்கம்:நாள் மலர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கன்னடர் புரிந்த இந்தக் குற்றம் சின்ன தென்று செப்புதற் கில்லை. அவர்கள் தமிழரைப் போருக் கழைத்தனர். அவர்கள் தமிழைத் தாழ்வு படுத்தினர் இந்நாள் அவர்களின் இச்செய லுக்குக் காரணம் எதுவெனக் கருத வேண்டும், தமிழர்கள் தமிழகம் பிரிதல் வேண்டும் என்று கூறு கின்றனர். எனவே தமிழக அண்டைப் பகுதிகள் தம்பால் நண்பு கொள்வதை நாடினரி தமிழர் இன்றைய ஆட்சியாளர் இதனை வெட்ட நினைப்பதில் வியப்பே இல்லை. கன்னடர் இன்று காட்டிய கையிருப்பு ஆட்சி யாளரின் தூண்டலின் விளைவே. நாமிதை விட்டு வைத்தால் நல்லதா? கன்னடர் பணிவு காட்டும் வரைக்கும் மூளட்டும் அறப்போர்! தமிழே ஆளட்டும் நாவலந் தீவனைத் தையுமே! 39 குயில் 15-5-62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/41&oldid=1524833" இலிருந்து மீள்விக்கப்பட்டது