பக்கம்:நாவல் பழம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்திருந்தால் முற்ருகவே ஒரு நல்ல நாவலாகவே இருந்: திருக்கும். அவருடைய 'அம்மா வந்தாள்" வெற்றி பெற்ற நாவல். ஆல்ை... அதற்குப் பிறகு அவரைக் காண முடிய வில்லை! காவிரி நதியாகும் பிரவாகம் எடுத்தவர் கரையோ ரத்துப் பட்டமரமாக நின்றுவிட்டார். * டாக்டர் மு. வ. காண்டேகரைப் பின்பற்றி எழுதினர். அவர் ஒரு நல்ல புத்தக வியாபாரி. ஆனல் எழுத்தாளர் அல்ல. ஒரு புத்தகத்தில் 395 மேற்கோள்களைத் திருடித் தனது சிந்தனையாக மாற்றியிருக்கிரு.ர். சிறுகதைத் துறையில் ஒரு சகாப்தத்தை உண்டாக்கிய ஜெயகாந்தன் "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' என்ற ஒரே ஒரு (முடியாத) நாவலைத்தான் நன்றக எழுதி யிருக்கிருர். அசோகமித்திரனின் முத்திரையும் சிறுகதைகளிலேயே மின்னுகின்றன. அவருயை "தண்ணிர்' நாவல் ஒரு இலக்கியப் பாலைவனம், 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/17&oldid=786033" இலிருந்து மீள்விக்கப்பட்டது