பக்கம்:நாவல் பழம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்முறைக்காரர்களால் வளர்க்கப்பட்டது. பல மாணவர் கள் பிணமானர்கள். மழைக் காலத்துக் குயிலைப் போன்ற ஊமை மனம், ஒசைக் கல்லறைகளாக மாறிவிட்ட உதடு கள், வார்த்தைகளையே உணவாக்கிக் கொண்ட நாக்கு, எங்கள் புராதன அன்பின் நினைவுச் சின்னமாக விழி வாசலை ஈரமாக்கிக் கொண்டிருந்த வெப்பமுள்ள கண்ணிர்த்துளிகள் இவைகளைக் காணிக்கையாக்கி நாங் கள் அஞ்சலி செலுத்தினுேம். மரணத்திற்குப் பிறகு ஊர் வலம் நடைபெறுவதுதான் வாடிக்கை. ஆல்ை எங்கள் சிவகங்கை ராஜேந்திரனுக்கு ஊர்வலத்திற்குப் பிறகு மரணம் வந்தது. தீக்குளித்துச் சின்னச்சாமி செத்த, போது அவனுடைய மனைவி குங்குமம் இழந்தாள். ஆனல் நாங்கள் அந்தத் தியாகியின் சாம்பலை நெற்றியில் பூசிவிடுதலை மதத்தின் வீர சைவர்களாக மாறினுேம்! மாணவர்களின் இடைவிடாத கோரிக்கையால் இரு மொழிக் கொள்கையைத் தமிழக அரசு சட்டமாக்கியது. 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/49&oldid=786101" இலிருந்து மீள்விக்கப்பட்டது