பக்கம்:நாவுக்கரசர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நிர்வுக்கரசர்

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய வொருவனைப் பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேனமறக் துய்வனோ (2)

என்பது இரண்டாம் பாடல். மங்குல் மதி தவழும் மாடவீதி’ (3.2) என்ற பதிகமும் இத்தலம் பற்றியதே.

வாரேறு வனமுலையாள் பாக மாக

மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச் சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்

திருவாஞ்சி யத்தார் திருகள் ளாற்றார் காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த

கண்விளங்கு நெற்றியார் கடல்கஞ் சுண்டார் பேரேறு தாமேறிப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. (4)

இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்

இமையவர்க்கும் ஏகமாய் கின்று சென்று பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்

பெரியான்றன் பெருமையே பேச நின்று மறந்தார்மனத் தென்றும் மறவார் போலும்

மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர் புறந்தார்சடை தாழப் பூதஞ் சூழப்

புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே (1)

என்பன நான்காம், ஏழாம் பாடல்கள். இப்பதிகப் பாடல்கள் முழுவதும் புக்கார் தாமே என்று இறுவதால் இது புக்க திருத்தாண்டகம் என்ற திருநாமம் பெறுகின்றது. அப்பர் பெருமான் திருவிதிப் பணி செய்துகொண்டு தில்லைச் சிற்றம்பலத்தின்கண் புகுந்தபோது இதனைப் பாடியிருக் கலாம் என்று ஊகிக்கலாம். பாடிய சூழ்நிலை தெளிவாக அறியக்கூடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/109&oldid=634097" இலிருந்து மீள்விக்கப்பட்டது