பக்கம்:நாவுக்கரசர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாவுக்கரசர்

வலம்புரத்தடிகளிடம் விடை பெற்றுக்கொண்டு திருச் சாய்க்காடு என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இரண்டு திருப்பதிகங்களால் வழிபடுகின்றார். தோடுலா மலர்:: (4.65) என்ற திருநேரிசைப் பதிகத்தில்,

ஆமலி பாலும் நெய்யும்

ஆட்டி அர்ச் சனைகள் செய்து பூமலி கொன்றை சூட்டப்

பொறாததன் தாதை தாளைக் கூர்மழு வொன்றால் ஒச்சக்

குளிர்சடைக் கொன்றை மாலைத் தாமநற் சண்டிக் கீந்தார்

சாய்க்காடு மேவி னாரே. (6)

என்பது ஆறாவது பாடல். இதில் சண்டேசுர நாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்) வரலாறு சுட்டப் பெறு கின்றது.

குவப்பெருந் தடக்கை வேடன்

கொடுஞ்சிலை இறைச்சி பாரம் துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்

தூயவாய்ச் கலசம் ஆட்ட உவப்பெருங் குருதி சோர

ஒருகணை இடங்தங் கப்பத் தவப்பெரும் தேவு செய்தார்

சாய்க்காடு மேவி னாரே. (8) என்பது எட்டாவது பாடல். இதில் கண்ணப்பநாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்) வரலாறு குறிப்பிடப் பெறு கின்றது.

11. சாய்க்காடு (சாயாவனம்): சீகாழியிலிருந்து 9 கல் தொலைவிலுள்ளது. ஆக்கூர் என்ற இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 5 கல் தொலைவு. திருவெண்காட்டிலிருந்து 1 கில் தொலைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/127&oldid=634117" இலிருந்து மீள்விக்கப்பட்டது