பக்கம்:நாவுக்கரசர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உறுதிபெற வுணர்ந்தமையால் ஆங்கிலநூல்

பலவற்றைத் தமிழின் கல்வித் துறைவளர மொழிபெயர்த்தான் சுப்புரெட்டி

யெனும்பெயர்கொள் தோன்றல் மாதோ.

மானிடவுடலும் அணுக்கரு அமைப்பும்

வயங்குவா னொலித்தொலைக் காட்சி ஏனைய பிறவும் உலகியல்வாழ்வில்

இற்றைநாள் உலவுபல் புதுமை நானிலத்தமிழர் நாடொறும் உணர

நல்லன அறிவியல் நூல்கள் தான் வரைந் தளித்தான் தமிழ்வழிஞானம்

தழைத்திட வேண்டுமென் றிவனே.

தொல்காப் பியரும் திருக்குறளும்

தொன்மை வளஞ்சேர் தொகைநூலும் ஒல்காப் பெருமை இளங்கோவின்

சிலம்பும் ஒளிசேர் கம்பர்பிரான் பல்காப் பியத்தின் வளங்கெழுமப்

பாடும் இராம காதையுடன் நல்லோர் பயிலும் திருத்தொண்டர்

புராண முதலாம் நற்றமிழும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/13&oldid=634120" இலிருந்து மீள்விக்கப்பட்டது