பக்கம்:நாவுக்கரசர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.02 நாவுக்கரசர்

இடைமருதூர் எம்பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு வாகீசர் நாகேச்சரம்? என்னும் திருத்தலத்தை அடைகின்றார். திருநாக ஈச்சரவனாரை அப்பர் பெருமான் மூன்று பதிகங்களால் வழிபடுகின்றார். கச்சைசேர் அரவர்’ (4.66) என்ற திரு நேரிசைப் பதிகத்தில்,

கற்றுணை வில்ல தாகக்

கடியரண் செற்றார் போலும் பொற்றுணைப் பாதர் போலும்

புலியத ளுடையார் போலும் சொற்றுணை மாலை கொண்டு

தொழுதெழு வார்கட் கெல்லாம் நற்றுணை யாவர் போலும்

நாகஈச் சரவ னாரே. (3)

என்பது மூன்றாவது பாசுரம். நல்லர் நல்லதோர்” (5, 52) என்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

மானை ஏந்தியப்கையினர் மையறு ஞானச் சோதியர் ஆதியர் நாமம்தான் ஆன அஞ்செழுத் தோதவங் தண்ணிக்கும் தேனர் போல்திரு நாகேச் சரவரே. (7)

என்பது ஏழாவது திருப்பாசுரம். ‘தாயவனை வானோர்க்கும்’ (6.66) என்ற திருத்தாண்டகப் பதிகத்தில், -

31. நாகேச்சரம் (திருநாகேஸ்வரம்): மயிலாடுதுறை தஞ்சை இருப்பூர்தி வழியிலுள்ள திருநாகேஸ்வரத்தி லிருந்து கல் தொலைவிலுள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. சேக்கிழாரடிகள் பெரிதும் ஈடுபட்ட தலம். தாம் குன்றத்துாரில் கட்டிய ஆலயத்திற்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டனர். சூரியன்,சந்திரன், ஐந்தலை நாகம் பூசித்ததைப் பாசுரம் (அப்பர் 5. 52:4) கூறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/145&oldid=634137" இலிருந்து மீள்விக்கப்பட்டது