பக்கம்:நாவுக்கரசர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 115

அரசறிய உரைசெய்த

அப்பூதி அடிகள்தாம் கரகமல மிசைகுவியக்

கண்ணருவி பொழிந்திழிய உரைகுழறி உடம்பெல்லாம்

உரோமபுள கம்பொழியத் தரையின்மிசை வீழ்ந்தவர்தம் சரணகம லம்பூண்டார்.4

என்று காட்டுவார். மனைவி மக்கள் முதலிய சுற்றத் தாருடன் நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கு கின்றார். தம் இல்லத்தில் திருவமுது செய்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார். அப்பரும் அவருடைய பேரன்புக்கு இசைந்தருளுகின்றார்.

அப்பூதியடிகள் விரும்பிய வண்ணம் அவருடைய இல்லத்தரசி அறுசுவையும் பொருந்தும்படி தூயநற் கறிக ளாக்கி இனிய திருவமுது சமைக்கின்றார். நாவுக்கரசர் திருவமுது செய்தருள்வதற்குத் தோட்டத்திற்குச் சென்று வாழைக் குருத்தை அரிந்து வரும்படித் தம் அருமைத் திருமகன் மூத்த திருநாவுக்கரசனை அனுப்புகின்றார். அவனும் நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்’ என்னும் உவகையுடன் இல்லத்துத் தோட்டத் திற் புகுந்து வாழைக் குருத்தை அரிகின்றான். அப்பொழுது அதன் அடியில் மறைந்திருந்த பாம்பு அவனைத் தீண்டிக் கையில் சுற்றிக் கொள்கின்றது. அவன் அரவத்தை விரை வில் உதறி வீழ்த்திவிட்டு விடவேகத்தால் தான் கீழே வீழ் வதற்குமுன் தான் கொய்த குருத்தினை வீட்டிற் சேர்க்கும் கருத்துடன் விரைந்தோடி வருகின்றான். அரசர் அமுது செய்வதற்குத் தடையாக அரவம் தீண்டிய செய்தியைத் தாய் தந்தையர்க்குச் சாற்றுதல் கூடாது’ என்னும் துணி

4. டிெ . 17. 5. டிெ - 20.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/158&oldid=634151" இலிருந்து மீள்விக்கப்பட்டது