பக்கம்:நாவுக்கரசர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 நாவுக்கரசர்

என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயல் சேறையுட் செந்நெறி மன்னு சோதிகம் பால்வந்து வைகவே. (2) என்பது இரண்டாவது பாடல். இதிலுள்ள பாடல்கள் யாவும் நெஞ்சை நெக்குருகச் செய்பவை.

சேறை எம்பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு குடவாயில் வருகின்றார். குடவாயில் இறைவனை வழி பட்டுக் கொண்டு (பதிகம் இல்லை) திருநறையூர் வருகின் றார். சித்திச்சரத்து எம்பெருமானை வழிபட்டுக்கொண்டு (பதிகம் இல்லை) திருசிவபுரம் வருகின்றார். வானவன் காண்’ (6.87) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்த் திருத் தாண்டக மாலை புனைந்து வழிபடுகின்றார். இதில்,

வெய்யவன் காண்; வெய்யகனல் ஏந்தி னான்காண்;

வியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்; மெய்யவன் காண்; பொய்யர்மனம் விரவா தான்காண்;

வீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க கையவன்காண்: கையில்மழு ஏக்தி னான்காண்;

காமரங்கம் பொடிவிழித்த கண்ணி னான்காண்; செய்யவன்காண்; செய்யவளை மாலுக் கீந்த

சிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் தானே.(7)

6. குடவாயில் (கொடவாசல்) : தஞ்சாவூர் - நாகூர் இருப்பூர்தி வழியில் கொரடாச்சேரி ே 7 கல் தொலைவு. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்து வழியிலுள்ளது.

7. நறையூர் (நறையூர் சித்தீச்சரம்): கும்பகோணத்தி லிருந்து 5 கல் தொலைவு. நாச்சியார் கோயில் போகும் பேருந்து வழி. -

8. சி. வ பு ர ம் : கும்பகோணத்திலிருந்து 1; கல் தொலைவு. திருமால் வராக உருவிற் பூசித்ததைச் சம்பந் தரின் 1, 21; 6 பாடலும் அப்பரின் 6.87:6 என்ற தாண் டகமும் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/171&oldid=634166" இலிருந்து மீள்விக்கப்பட்டது