பக்கம்:நாவுக்கரசர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130: நாவுக்கரசர்

பந்த பாச மறுத்தெனை ஆட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த கீர்க்கடு வாய்க்கரைத் தென் புத்துர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே. (6) என்பது ஆறாவது பாசுரம்.

கடுவாய்ப் புனலாடிய ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாஞ்சியம் வருகின்றார். படையும் பூதமும்’ (5.67) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்

புற்றில் ஆடர வோடு புனல்மதி தெற்றும் செஞ்சடைத் தேவர்பி ரான்பதி சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க்குப் பாவ மில்லையே. (3)

என்பது மூன்றாவது பாடல். இப்பதிகத்தில் 8, 9, 10-ஆம் பாடல்கள் கிடைக்க வில்லை. -

வாஞ்சியத்தெம்பெருமானிடம் வி ைட ெப ற் று க் கொண்டு அப்பர் பெருமான் பெரு வேளுர் வருகின்றார். மறையணி நாவினனை (4.66.) என்ற திருநேரிசைச் செந்தமிழ் மாலை பாடிப் பெருவேளுர்ப் பேணிய பெம் மானை ஏத்துகின்றார். இதில், -

விரிவிலா அறிவி னார்கள்

வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னா ரேனும்

எம்பிராற் கேற்ற தாகும்

11. வாஞ்சியம் (ரீ வாஞ்சியம்): நன்னிலத்திலிருந்து 6 கல் தொல்ைவு. திருமால் ஸ்ரீ என்னும் இலக்குமியை வாஞ்சித்துச் சிவபூசை செய்து பெற்றமையால் ரீ வாஞ்சி யம் ஆயிற்று. காசிக்கு நிகர் எனப்படும் தலங்களுள் ஒன்று. 12. பெருவேளுர் (காட்டுர் ஐயம் பேட்டை): தஞ்சை. நாகூர் இருப்பூர்தி வழியில் கொரடாச்சேரியிலிருந்து 8: கல் தொலைவிலுள்ளது. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/173&oldid=634168" இலிருந்து மீள்விக்கப்பட்டது