பக்கம்:நாவுக்கரசர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாவுக்கரசர்

றார். திருநாவுக்கரசரும் பதிகம் முழுதும் பாடி முடிக்கும் நிலையில் தம் வேண்டுகோட்கிணங்கி இறைவன் திருக்கதவு திறந்தருளாமை கண்டு வருத்தமுறுகின்றார். இந்நிலையில் :இராவணனை விரலால் அடர்த்திட்ட நீவிர் ஒரு சிறிதும் இரக்க முடையவர் அல்லீர்’ என இறைவனை நோக்கிப் பிணங்கிப் பேசும் முறையில்,

அரக்க னைவிர லால் அடர்த் திட்டநீர் இரக்க மொன்றி லீர்எம் பெருமானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கத வந்திறப் பிம்மினே. (11)

என்ற இறுதிப் பாடல் அமைகின்றது. இந்நிலையில் பன் னெடு நாட்களாக அடைக்கப்பெற்றிருந்த திருக்கதவு இறைவனருளால் திறக்கப்பெறுகின்றது.

அப்பொழுது பிள்ளையாரும் அரசரும் நிலமிசை வீழ்ந்திறைஞ்சி நேர்முக வாயில்வழியே திருக்கோயிலுட் புகுந்து மறைக்காட்டீசரை வணங்கி வண்தமிழ் மாலைகள் பாடிப் போற்றுகின்றனர். அப்பொழுது நாவுக்கரசர் காழிப் பிள்ளையாரை நோக்கி, இறைவன் திருவருளால் இத்திருக்கதவு நாடோறும் திறக்கவும் அடைக்கவும் பெறும் நிலையில் இந்நிறைக் கதவம் அடைத்திடும்படி பாடி யருளுக என வேண்ட, பிள்ளையாரும் சதுரம் மறை: (சம்பந்தர் 2.37) என்பதை முதற்குறிப்பாகக் கொண்டி திருப்பதிகத்திதைத் தொடங்கி முதற்பாடலைப் பாடிய வுடன் இறையருளால் திருக்கதவம் விரைவில் அடைக்கப் பெறுகின்றது.அதுகண்டு இருவரும் பெருமகிழ்ச்சி அடைந்து மறைக்காட்டீசரைப் போற்றுகின்றனர். பிள்ளையார் தாம் எடுத்த திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்களை யும் பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தியருளுகின்றார். அன்று முதல் அத்திருக்கதவு திறத்தலும் சாத்துதலுமான வழக்கத்தைப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/215&oldid=634214" இலிருந்து மீள்விக்கப்பட்டது