பக்கம்:நாவுக்கரசர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.74. ந்ாவுக்கரசர்

என்று நம்பியாண்டார் நம்பியும் விரித்துரைத்துப் போற்று வர்,

திருமறைக் காடரின் திருவருள் பெற்ற இரு பெருமக் களும் திருமறைக் காட்டிலுள்ள ஒரு திருமடத்தில் அடியார் களுடன் வந்து அமர்கின்றனர். தாம் அரிதில் திறக்கப்பாடிய தன்மையும், காழிப் பிள்ளையார் விரைவில் அடைக்கப் பாடிய எளிமையும் நாவுக்கரசரைச் சிந்திக்க வைக் கின்றன. திருக்கதவு திறக்கத் தாழ்ந்ததன் காரணம் இறைவனது திருக்குறிப்பினை யான் உணராது அயர்ந் தமையே எனக் கவலையுற்ற மனத்தினராய் அத்திரு மடத்தின் ஒருபால் துயில் கொள்ளுகின்றார் வாய்மை திறம்பா வாகீசர். 3. -

வாய்மூரடிகளின் காட்சி : திருமறைக் காட்டு மாமணி யின் பாதங்களை மனத்திடையே வைத்து எண்ணித் துயி லுகையில் அம்மையப்பர், பொன்மேனியில் வெண்ணிறு பூசிய சைவ வேடத்தினராய் அவர் கனவில் தோன்று ஒன்றார். தோன்றியவர், அன்பனே, வாய்மூரில் இருப் போம்; எம்மைத் தொடர்ந்து வருக என்று கூறி முன்னே செல்லுகின்றார். இந்நிலையில் மெய்யுணர்வு பெற்று விழித்தெழுகின்றார் நாவுக்கரசர். ‘யான் இருந்த இடத் தில் என்னைத் தேடிக் கொண்டு வந்து தம்மைத் திருவாய் மூர்த்’ தலைவரென் அடையாளங்களுடன் சொல்லி அங்கேவா” என்று கூறிப் போயினர். அஃதென்கொல்?” என ஐயமுற்று, -

எங்கே என்னை இருந்திடங் தேடிக்கொண் டங்கே வந்தடை யாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார தென்கொலோ (5.50:1) 19. வாய்மூர் (திருவாய்மூர்) : மயிலாடுதுறை காரைக் குடி வழியில் திருநெல்லிக் காவல் என்ற நிலையத்திலிருந்து 8 கல் தொலைவு. அப்பருக்கு வருமாறு இறைவன் கட்டளை யிட, அவர் சென்று தரிசித்ததை 5.50: 1; 5.50: 2 என்ற பாசுரங்கள் பகரும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/217&oldid=634216" இலிருந்து மீள்விக்கப்பட்டது