பக்கம்:நாவுக்கரசர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நாவுக்கரசர்

என்ற திருப்பாடலைப் பாடுகின்றார். வாய்மூர் இறை வனும் பிள்ளையார் காண நேரே தோன்றி ஆடல் காட்டி அருள் புரிகின்றார். அந்த அழகிய தெய்வக் காட்சியைக் கண்ட காழிப்பிள்ளையார் தளரிளவளரென வுமையாட’ (சம்பந்தர் 2.111) என்ற திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றித் தாம் கண்ட தெய்வக் காட்சியினைத் தம் கெழு தகை நண்பர் ஆளுடைய அடிகட்கும் காட்டி மகிழ்கின் றாா. •

இந்நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான்,

மாட நீடு திருப்புகலி

மன்னர் அவர்க்கு மாலயனும் கேடி இன்னங் காணாதார் - -

நேரே காட்சி கொடுத்தருள

ஆடல் கண்டு பணிந்தேத்தி -

அரசுங் காணக் காட்டுதலும்

பாட அடியார் என்றெடுத்துப்

பரமர் தம்மைப் பாடினார்.20

என்று கூறுவர். இப்பாடலில் அரசுரங் காணக் காட்டு தலும் என்ற தொடரில் காட்டுதல் என்கின்ற வினை இறைவனுக்குரியது. காணுதல் இருவர்க்கும் பொதுவான தொழில். ஈண்டு இதுபோலப் பொருள் கொள்ளாமல் ஞானசம்பந்தர்க்கு நேரே காட்சி கொடுத்ததாகவும், பின்பு அவர் அப்பருக்குக் காட்டியதாகவும் பொருள் கொள் ளுதல் சேக்கிழாரைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாக முடிந்து விடும்.’

20. .: திருநாவுக்.281 - -

21. அப்பர் பெருமான் - வாழ்வும் வாக்கும். பக்-442. (பூம்புகார்ப் பேரவைக் கல்லூரி வ்ெளியீடு-மேலையூர்-609 i07 (மே.1980) • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/219&oldid=634218" இலிருந்து மீள்விக்கப்பட்டது