பக்கம்:நாவுக்கரசர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ந்ாவுக்க்ரசர்

பாட அடியார் பரவக் கண்டேன்;

பத்தர் கணங்கண்டேன்; மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; -

அங்கை அனல்கண்டேன்; கங்கை யாளைக் கோட லரவார் சடையிற் கண்டேன்; -

கொக்கி னிதழ்கண்டேன்; கொன்றை கண்டேன்; வாடல் தலையொன்று கையில் கண்டேன்; -

வாய்மூ ரடிகளை நான் கண்ட வாறே. (1)

என்பது முதற் பாடல். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், வாய்மூ ரடிகளை நான் கண்டவாறே: என்று தாம் கண்ட தெய்வக் காட்சியை வியந்துரைத்துப் போற்றி மகிழ்தலை நாமும் கண்டு மகிழலாம். இங்கு நான் கண்டவாறே என்பதில் பொய்யடையாத’ அப்பரின் உள்ளம் புலப்படுகின்றது. திருஞான சம்பந்தர் காட்டவே தாம் கண்டிருப்பாரானால் காட்டக் கண்டேன்’ என்பது போலவே பாடியிருப்பார் என்பது ஈண்டு மேலும் சிந்திக்கத் தக்கது.

நாவுக்கரசருக்கும் ஞானப் பிள்ளையாருக்கும் ஆடல் காட்டி அருள் புரிந்த வாய்மூரிறைவன் அவ்விரு பெரு மக்களும் பாடிப் போற்றிய செந்தமிழ்ப் பாமாலைகளை அன்புடன் ஏற்று மறைந்தருள்கின்றார். நாயன்மார்கள் இருவரும் திருவாய்மூர் அடைந்து அங்கு எழுந்தருளியிருக், கும் இறைவனை இறைஞ்சிப்போற்றி அங்குச் சில நாட்கள் தங்கியிருக்கின்றனர்.

இருவர் நட்பின் பெருமை : எங்கே என்னை’ (5.50). என்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தினால் இந்த இருபெரு மக்களின் நட்பின் பெருமையை உணர முடிகின்றது. இதைப் பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் மிக நன்கு விளக்குவர். திருநாவுக்கரசர் மறைக்காட்டுத் திருக்

23. பன்னிரு திருமுறை வரலாறு - இபகுதி பக்.183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/221&oldid=634221" இலிருந்து மீள்விக்கப்பட்டது