பக்கம்:நாவுக்கரசர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நாவுக்கரசர்

என்ற பாடலால் புலப்படுத்துவதைக் கண்டு மகிழலாம். இங்ஙனம் நட்டாற்றில் கைவிட்டதுபோல் நடுவழியில் இறைவன் மறைந்தமை கண்டு மனம் கலங்கிய நாவுக்கரசர் :இறைவன் நம்முன் தோன்றி வாய்மூருக்கு வா” என அழைத்து வந்ததும் பொய்யோ?’ என்று ஐயுற்றனர் என்பது,

மாதே வாகிய வாய்மூர் மருவினார் போதே யென்று புகுந்ததும் பொய் கொலோ: (6)

எனவரும் அவரது பாடற் பகுதியால் புலனாகும்.

வாய்மூர் அடிகளைக் காணாது வழியிடையே வருந் திய வாகீசர் பெருமான் தம்முடைய அரும்பெறல் நண்பர் காழிப் பிள்ளையார் தம்மை அன்புகொண்டு தேடி வரு தலைச் சேய்மையிற் கண்டு வீழி மிழலை இறைவனைப் பாடி வாசி தீரக் காசு பெற்ற அப் பெருந்தகையார் என். பால் வைத்துள்ள பேரன்பினால் இப்பொழுது என்னைத் தேடி வருதல் போன்று வாய்மூர் இறைவனும் என்மீது வைத்துள்ள பெருங் கருணையால் என்னைத் தேடிவந்து திருவாய்மூருக்கு வருவாயாக’ என்று சொல்லி வழியில் ஒளித்ததும் முறையாமோ?’ என்று ஆளுடைய பிள்ளை யாரது பேரன்பின் திறத்தையும் வாய்மூரடிகளின் அருட் செயலையும் நினைந்துருகினர் என்பது, -

பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டக் தவிர்ப்பார் அவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா ஒடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ? (7)

என்று அவர் பாடியருளிய திருப்பாடலால் இனிது புல னாகும். இதில் காழிப்பிள்ளையார் தம்மைத் தேடி வந்த அன்பின் செயலைத் தம்மைத்திருமறைக் காட்டில் அழைக்க வந்த வாய்மூரடிகளின் அருட் செயலுக்கு நாவுக்கரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/223&oldid=634223" இலிருந்து மீள்விக்கப்பட்டது