பக்கம்:நாவுக்கரசர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையில் தல வழிபாடு 19.1

என்பது எட்டாவது திருவிருத்தம். கங்கையைச் சடையுள் கரந்து வைத்துள்ள கள்ளத்தை மெல்ல நங்கை உமை அறியில் அது பொல்லாததாக முடியும் என்கின்றார்.

“பாணத்தால் (5. 83) என்ற முதற் குறிப்பினை யுடைய திருக்குறுந்தொகைப் பதிகத்தில்

புனையும் மாமலர் கொண்டு புரிசடை நனையும் மாமலர் சூடிய கம்பனைக் கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை கினைய வேவினை யாயின. நீங்குமே. (3)

என்பது மூன்றாவது பாடல், பாரார் பரவும் (6, 22) என்ற முதற்குறிப்பையுடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை யில்,

சொல்லார்ந்த சோற்றுத் துறையான் தன்னைத்

தொல்கரகம் கன்னெறியால் துரப்பான் தன்னை வில்லானை மீயச்சூர் மேவி னானை

வேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்

பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக் கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்

காரோணத் தெஞ்ஞான்றும் காண லாமே.(9)

என்பது இம்மாலையில் ஒன்பதாவது நறுமணம் வீசும் மலர். கல்லாலின்கீழ்ச் சனகாதி முனிவர் நால்வர்க்கும் வேதம் சொல்லியவன், தொல் நரகம் தூர்த்துப் பக்தர்க்கு நன்னெறியருளுபவன் என்கின்றார்.

திருநாகையிலிருந்து திருவீழிமிழலைக்கு வருகின்றார் அப்பர் பெருமான். இஃது இரண்டாவது முறையாக வந்தது

4. இத்தலம் பற்றி முன்னமே எழுதப் பெற்றுள்ளது. பக், 163 காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/234&oldid=634235" இலிருந்து மீள்விக்கப்பட்டது